Friday, January 25, 2019

திருமதி சிறிகாந்தன் ரவீந்திரா மரண அறிவித்தல்!


யாழ். சுதுமலையைப் பிறப்பிடமாகவும், கனடாவை வசிப்பிடமாகவும் கொண்ட சிறிகாந்தன் ரவீந்திரா அவர்கள் 23-01-2019 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற சின்னத்துரை தம்பையா, இரத்தினம் தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான அருணாசலம் நமசிவாயம் முத்துதம்பி ராசம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,
சிறிகாந்தன் அவர்களின் அன்பு மனைவியும்,
பூபிகா(கனடா), புவிராஜ்(அவுஸ்திரேலியா) ஆகியோரின் அன்புத் தாயாரும்,
கோபிகா(அவுஸ்திரேலியா) அவர்களின் அன்பு மாமியாரும்,
விரதசாரணி(இலங்கை), பற்குணராஜா(இலங்கை), செல்வராஜா(குஞ்சன்- கனடா), புவனராணி(கனடா), சுகுணராணி(இலங்கை) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
நாகரத்தினம் ராசதுரை, காலஞ்சென்றவர்களான அன்னபூரணம் பரம்சோதி, சண்முகரத்தினம் நமசிவாயம் மற்றும் சற்குணாதாசன் நமசிவாயம், மனோகரன் நமசிவாயம்(அவுஸ்திரேலியா) ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
டிவியேஸ்(கனடா), ஆரியன்(கனடா) ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்


தொடர்புகளுக்கு


ஸ்ரீகாந்தன் - கணவர்

புவிராஜ் - மகன்

மயூரன் - பெறாமகன்

குணம் - சகோதரர்

குஞ்சன் - சகோதரர்

No comments:

Post a Comment