Wednesday, July 25, 2018

அகதியை காப்பாற்ற விமானத்தை நிறுத்திய பெண்: அடுத்து செய்த செயல்.... வைரலாகும் வீடியோ


புகலிடம் கோரியவர் நாடுகடத்தப்பட விமானத்தில் ஏற்றப்பட்ட நிலையில், அவரை நாடுகடத்தக்கூடாது என இளம் பெண் விமானத்தை கிளம்பவிடாமல் செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
ஸ்வீடனிலிருந்து துருக்கி நோக்கி செல்ல பயணிகள் விமானம் தயாராக இருந்த நிலையில், ஆப்கானிஸ்தானை சேர்ந்த நபர் ஒருவர் நாடுகடத்தப்பட அந்த விமானத்தில் ஏற்றப்பட்டுள்ளார்.
இதை பார்த்த விமானத்தில் இருந்த எலின் எர்சன் (22) என்ற பெண், இருக்கையில் உட்காராமல் எழுந்த நிலையில் புலம்பெயர கோரிய அந்த நபர் நாடு கடத்தப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்தார்.
மேலும், நபரை கீழே இறக்க வேண்டும் எனவும் அதை செய்யாதபட்சத்தில் விமானத்தை கிளம்ப விடமாட்டேன் என கூறினார்.
இதை செய்யும்போது கண்கலங்கிய எர்சன் குறித்த நபர் நாடுகடத்தப்பட்டால் அவர் உயிருக்கு ஆபத்து என கூறினார்.


இதையெல்லாம் எர்சல் பேஸ்புக் நேரலையில் வீடியோவாக பதிவு செய்தார்.
எர்சல் செயலால் விமானம் கிளம்ப சில மணி நேரம் தாமதமானது, அப்போது அவர் கூறுகையில், ஒருவரின் உயிர் முக்கியமா அல்லது உங்கள் நேரம் முக்கியமா என கேட்டார்.
எர்சன் செயலால் விமானத்தில் பரபரப்பு ஏற்பட்ட நிலையில் நாடுகடத்தப்பட இருந்த நபர் கீழே இறக்கப்பட்டார்.
பின்னர் விமானம் கிளம்பி சென்றது, அதிகாரிகள் கூறுகையில், குறித்த நபர் விரைவில் வேறு விமானத்தில் நாடுகடத்தப்படுவார் என கூறியுள்ளனர்.
இதனிடையில் விமான நிறுவனம் விடுத்துள்ள அறிக்கையில், எர்சன் மீது வழக்கு பாயுமா என தெரியவில்லை, அப்படி பாய்ந்தால் அபராதம் அல்லது ஆறு மாதம் சிறை தண்டனை கிடைக்கும் என கூறப்பட்டுள்ளது.
ஆப்கானிஸ்தானுக்கு நாடுகடத்தப்பட இருந்த நபர் என்ன தவறு செய்தார் என்ற விபரம் தெரியவில்லை.


http://news.lankasri.com/othercountries/03/184230?ref=ls_d_world

No comments:

Post a Comment