Thursday, July 26, 2018

பெரிய பாதங்களின் புதைபடிவம், டைனோசரினுடையதாக இருக்கலாம் என ஆய்வாளர்கள் யூகம்!


ஆய்வாளர்கள் தற்போது பெரிய பாதங்களின் புதைபடிவம் ஒன்று டைனோசரினுடையது எனக் கண்டுபிடித்துள்ளனர். இது இதுவரையில் கண்டுபிடிக்கப்பட்ட டைனோசர்களின் பாத சுவடுகளிலும் பார்க்கப் பெரியது என சொல்லப்படுகிறது.
இது கிட்டத்தட்ட 1 மிட்டர் அகலமானது. கண்டபிடிக்கப்பட்ட போது இது மிகப்பெரிய ஒரு மிருகத்தினுடையதாக இருக்கலாம் என நம்பப்பட்டிருந்தது. அத் தருணத்தில் இது "பெரிய பாதம்” என செல்லப் பெயரும் சூட்டப்பட்டிருந்தது.
வயோமிங்கில் கண்டுபிடிக்கப்பட்ட இப் புதைபடிவமானது சோறோபோட் டைனோசர் வகையான பிறாச்சியோசரினுடையது என ஆய்வுகள் உறுதிப்படுத்தியுள்ளன.
இது தொடர்பான பதிவுகள் PeerJ எனும் ஆய்வுப் பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ளன.
மேலும் 150 மில்லியன் வருடங்களுக்கு முன்னர் இப் பிறாச்சியோசர் வட அமெரிக்காவின் பரந்த பகுதியில் வாழ்ந்துள்ளது எனவும் தகவல்கள் சொல்லுகின்றன.
இப்புதைபடிவம் 1998 ஆம் ஆண்டு காலப்பகுதியில் தோண்டி எடுக்கப்பட்டிருப்பினும் பரிசோதனைகள் தற்போது தான் அது டைனோசரினுடையது என உறுதிப்படுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.


http://news.lankasri.com/special/03/184243?ref=ls_d_others

No comments:

Post a Comment