Wednesday, May 23, 2018


நண்பரின் அருமையான பதிவு###
மாடு வளர்ப்பவர்கள், விற்பவர்கள் 98% சிங்களவர்களும் தமிழர்களுமே.
இலங்கையில் குறைந்தது தினமும் 5000 மாடுகள் உணவுக்காக வெட்டப்படுகிறது.
ஒரு மாதத்திற்கு 1,50,000 மாடுகள்.
ஒரு வருடத்திற்கு 18,00,000 மாடுகள்.
ஐந்து வருடங்களுக்கு கிட்டத்தட்ட ஒரு கோடி மாடுகள் உணவுக்காக வெட்டப்படுகின்றன.
மாடு வெட்டுவதை ஐந்து வருடங்களுக்கு இலங்கையில் தடை செய்தால் சிங்கவர்களுக்கும் தமிழர்களுக்கும் ஒரு இலட்சம் கோடி (1,000,000,000,000) அதாவது அயிரம் பில்லியன் ரூபா நஷ்டம்.
மாட்டிரைச்சி சாப்பிடும் மக்களில் முஸ்லிம்கள் வெறும் ஐந்து வீதத்திற்கும் குறைவானவர்களே உள்ளனர். மக்கள் தொகையில் 50% மானவர்கள் சாப்பிட்டால் கூட இதுதான் உண்மை.
அது சரி. இன்னொரு கோணத்தில் பார்ப்போம்.
இறைச்சிக்காக வெட்டப்படும் மாடுகள் 99% மாவைகள் காளை மாடுகளே. காளை மாடுகளால் வேறு பயன்கள் இல்லை. முன்பு வண்டி இழுத்தது. வயலை உழுதது. இவைகள் இயந்திரமயமாகி விட்டதால் காளைகளை பயன் படுத்துவதில்லை.
இறைச்சிக்காக வெட்டுவதையும் அரசு தடை செய்து விட்டால். எந்தப்பயனும் இல்லாத காளைகளை பல ஆயிரங்களை செலவு செய்து யாராவது வளர்ப்பார்களா? 100 ரூபாக்குக்கூட விற்க முடியாத காளை மாட்டை யார் பல ஆயிரங்களை செலவு செய்து வளர்ப்பார்கள், பட்டிகள் அமைத்து பராமரிப்பார்கள்?
அப்படியானால் பிறக்கும் காளை மாட்டுக் கண்றுக்குட்டிகளை என்ன செய்வது? கொண்றுவிட வேண்டும் அல்லது வீதியில் அனாதரவாக விட்டுவிட வேண்டும்.
இதற்கு அரசாங்கம் அனுமதிக்குமா?
அதுவும் சரிதான். இன்னொரு பக்கத்தையும் பார்ப்போம்.
ஒரு மாட்டுக்கு ஒரு நாளைக்கு 50 லீட்டர் தண்ணீரும் 50 கிலோ உணவும் தேவை. ஐந்து வருடங்களுக்கு ஒரு கோடி மாடுகளுக்கு 50 கோடி லீட்டர் தண்ணீரும் 50 கோடி கிலோ உணவும் தேவைப்படும். இவற்றை யார் அவைகளுக்கு வழங்குவார்கள்?
பத்து வருடங்களுக்கு மாடு அருப்பதை தடை செய்தால் இலங்கையில் மக்கள் தொகையை விட கட்டாக்காளி மாடுகளின் தொகை அதிகரித்து விடும். மிகுதி பிறகு.

நம் கருத்து:அப்ப பன்றியை சாப்பிடாமல் விட்டால் அவை பெருகி மக்களுக்கு பிரச்சனை வந்துவிடும் என்பதாலா அதை சாப்பிடுகின்றார்கள்?நமக்கு புரியாமல் போச்சே!!வடை போச்சா?!நீங்க உங்களுக்கு அளவான தொப்பி போட்டா காக்கா நாங்க எங்க தொப்பியை இப்படி போடுவோமல்லா!!

No comments:

Post a Comment