Wednesday, May 23, 2018

வவுனியாவில் பல குடும்பங்கள் சீரழியும் நிலை!


வவுனியா பண்டாரிகுளம் அம்மன் கோவில் வீதி தச்சனாங்குளம் பகுதியில் அமைந்துள்ள பனை தென்னை கூட்டுறவு சங்கத்திற்கு சொந்தமான கள்ளுத்தவறணையில் சமூக சீர்கேடுகள் இடம்பெறுவதாக அறியவந்துள்ளது
இது பற்றி மேலும் அறியவருவதாவது குறித்த கள்ளுத்தவறணையானது கடந்த 2017ம் ஆண்டளவில் முதலமைச்சரின் கோரிக்கைக்கினங்க பனை தென்னை அபிவிருத்தி கூட்டுறவு சங்கத்தினரால் மூடப்பட்டுள்ளது அதன் பின் இப்பகுதி ஆள் நடமாற்றமற்ற பகுதியாக மாறியதுடன் அந்த கட்டிடத்தை சுற்றி பற்றைக்காடுகள் வளர்ந்தும் பராமரிப்பு அற்றும் காணப்படுகிறது
எனவே இதனை அவதானித்த சில சமூக விரோத கும்பல்கள் அதனை சமூக சீரழிவான செயற்பாடுகளுக்கு அந்த கட்டிடத்தை உபயோகிப்பது தெரியவந்துள்ளதுடன் கிராம மக்களின் விசனத்திற்கும் அப்பகுதி உள்ளாகியுள்ளது
இந்த பகுதிக்கு விஜயம் செய்த எமது செய்தியாளர்கள் அப்பகுதியை ஆராய்ந்த பொழுது அங்கு மது போத்தல்களும்,பியர் டின்களும் காணப்பட்டதுடன், கஞ்சா பாவனைகளும் இடம்பெற்றுள்ளது என்பதும் கண்டறியப்பட்டுள்ளது இதேவேளை இப்பகுதியில் விபச்சாரமும் இடம்பெறுவதாகவும் இரவு வேளைகளில் ஆண்களுடன் பெண்களும் இந்த பகுதியில் நடமாடுவதாக ஒரு சாரார் கூறியதுடன் சில நேரங்களில் பாடசாலை மாணவர்களும் சீருடையுடன் வந்து மது அருந்துவதாகவும் பலர் குற்றம்சாட்டி வருகின்றனர்
இது தொடர்பாக பனை தென்னை அபிவிருத்தி கூட்டுறவு சங்கத்திடம் தொடர்பு கொண்ட பொழுது குறித்த தவறணைக்கு 1998ம் ஆண்டு அனுமதி பத்திரம் வழங்கப்பட்டு நடாத்தி வந்ததாகவும் பின்பு அந்த பகுதியில் ஓர் விநாயகர் கோவில் எழுப்பட்டு சுற்றுமதில் கட்டும் போது தவறணை காணியின் உரிமையாளரால் குறித்த கோவிலின் சுற்றுமதில் தொடர்பாகவும் அத்துடன் அந்த மதிலால் குளகட்டினூடாக பநணிபரபவர்களுக்கு இடையூறு என்று கமநல திணைக்களத்திடம் முறையிட்டு குறித்த சுற்று மதில் அமைப்பதை நிறுத்தியுள்ளார்.
எனவே இதனால் ஆத்தர முற்ற அக்காலத்தில் இருந்த கோவில் தலைவர் குறித்த நபரின் காணியிலிருந்த கள்ளுத்தவறணைக்கு எதிராக முதலமைச்சரிடம் புகார் வழங்கியதனையடுத்து முதலமைச்சர் அவர்கள் குறித்த கள்ளுத்தவறணையை மூடுமாறு பணித்துள்ளார் எனினும் குறித்த தவறணையால் கோவிலுக்கு எதுவித பாதிப்பும் இல்லை என்று சங்கத்தினர் மீள முதலமைச்சருக்கு அனுப்பிய கடிதத்தினையடுத்து இரு தரப்பினரையும் அழைத்து சுமூகமாக தீர்வு காணும்படி முதல்வர் அவர்கள் தெரிவித்துள்ளார் எனினும் இதுவரை எந்த விதமான நடவடிக்கைகளும் இதுவரை இடம்பெறவில்லை என சங்கத்தின் கிளை முகாமையாளர் தெரிவித்தார்
இதேவேளை தவறணை இயங்கி வந்த காலப்பகுதியில் எதுவிதமான சமூக விரோத செயல்களும் இந்த பகுதியில் இடம்பெற்றிருக்கவில்லை என்பதுடன் குறித்த தவறணையில் நாளொன்றுக்கு 400 முதல் 450 வரையிலான போத்தல் கள்ளு விற்பனையாகி உள்ளது இதனை வாழ்வாதாரமாக கொண்ட 12 தொடக்கம் 15 பேர் வரையிலான தொழிலாளிகள் நலன் பெற்று வந்தனர்.
தவறனை மூடிய பின்பு இந்த தவறனையை வாழ்வாதாரமாக நம்பியிருந்த 15 தொழிலாளர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினர் பெரிதும் பாதிப்படைந்துள்ளதுடன் அவர்களது குடும்ப செலவிற்கும் பிள்ளைகளின் கல்வியும் பெரிதும் பாதிப்படைந்த நிலையில் சீரழிந்து காணப்படுகிறது
இது தொடர்பாக கமநல திணைக்களத்தின் உதவி ஆணையாளரை தொடர்பு கொண்ட பொழுது
குறித்த கோவிலானது குளகட்டிற்கு ஒதுக்கப்பட்ட நில பரப்பில் கட்டப்பட்டுள்ளதாகவும் குறித்த கோவிலில் தொடர்ந்தும் கட்டுமான பணிகள் அல்லது விஸ்தரிப்பு செய்வதற்கு தடை விதித்துள்ளதாகவும் கூறியதுடன் இக்கோவிலை பதிவு செய்த பிரதேச செயலகம் சம்பந்தப்பட்ட எமது திணைக்களத்திடம் விளக்கம் கோராமல் பதிவு செய்து வழங்கியமை தவறு எனவும் சுட்டிக்காட்டியிருந்தார்
இதேவேளை கோவில் நிர்வாகத்தை சேர்ந்த ஒருவரிடம் தொடர்பு கொண்ட போது
குறித்த கோவிலானது ஆரம்பத்தில் விநாயகர் கோவிலாக இருந்த பொழுது 2008 ம் ஆண்டு பிரதேச செயலகத்தில் பதிவு செய்ததாகவும் பின்னர் 2011ம் ஆண்டளவில் குறித்த கோவிலுக்கு வலம்புரி விநாயகர் ஆலயம் என பெயர் மாற்றம் செய்து மீண்டும் 2011ம் ஆண்டு ஐப்பசி மாதம் 14ம் திகதி பதிவு செய்துள்ளதாகவும் குறிப்பிட்டார்
இதேவேளை குறித்த கோவிலானது நகரசபை எல்லைக்குள் இருப்பதால் நகரசபையிலும் எந்தவிதமான அனுமதியும் பெற்றிருக்கவில்லை என நகரசபை செயலாளர் தெரிவித்தார்
இந்த தவறணையினால் குறித்த கோவிலுக்கு எந்தவிதமான பாதிப்பும் இல்லை எனவும் குறித்த தவறணையை தொடர்ந்து நடாத்துவதற்கு அனுமதியளிக்குமாறும் மதுவரி திணைக்களம் பிரதேச செயலாளரிடம் கோரிக்கை விடுத்துள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது
இந்த பதிவானது கோவிலுக்கு எதிரானதோ அல்லது மதத்திற்கு எதிரானதோ இல்லை இரு வேறு நபர்களுடைய தனிப்பட்ட விரோதமானது குறித்த தவறணையினை மூட வைத்து குறித்த தவறணையை நம்பி வாழ்ந்த 15 குடும்பங்கள் இன்று நடுத்தெருவில் விடப்பட்டுள்ளது, அவர்களின் வாழ்வாதரத்தை கருத்தில் கொண்டும், மேலும் சமூக சீர்கேடுகள் குறித்த பகுதியில் இடம்பெறாமலிருக்கவும் இது தொடர்பான அதிகாரிகள் உடனடியாக முன்வந்து உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்பதே எமது கருத்தாகும்
இதேவேளை இங்கு மற்றுமோர் விடயமும் குறிப்பிட வேண்டியுள்ளது வவுனியா வைரவர் புளியங்குளத்தில் உள்ள மதுபான நிலையம் அதன் முன்புறமாக உள்ள கோவில் ஒன்றிற்கும் நடந்த வழக்கு ஒன்றில் குறித்த மதுபான நிலையத்தின் அனுமதி பத்திரமானது கோவில் அமைவதற்கு முன்னதாகவே வழங்கப்பட்டிருந்த காரணத்தினால் குறித்த மதுபான நிலையம் தொடர்ந்து நடாத்துவதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.







http://www.jvpnews.com/srilanka/04/173564?ref=ls_d_jvp

No comments:

Post a Comment