Wednesday, April 25, 2018

ஜேர்மனியில் நடந்த மாநாட்டில் இந்தியருக்கு உயரிய விருது


ஜேர்மனியில் நடைபெற்ற 12 வது சர்வதேச அன்னப்பிளவு மற்றும் கபால சீரமைப்பு மாநாட்டில் மிக உயரிய அறிவியல் ஆராய்ச்சி விருதான பேராசிரியர் டேவிட் பிரிசியஸ் விருது டாக்டர் எஸ்.எம்.பாலாஜிக்கு வழங்கப்பட்டது.
ஜப்பானை தலைமை இடமாக கொண்டு உதடு மற்றும் அன்னப்பிளவிற்கான சர்வதேச அமைப்பான ஐ.சி.பி.எஸ் செயல்பட்டு வருகிறது.
இந்த அமைப்பின் உயரிய விருதான பேராசிரியர் டேவிட் பிரிசியஸ் விருது சென்னையை சேர்ந்த மருத்துவர் எஸ்.எம்.பாலாஜிக்கு வழங்கப்பட்டுள்ளது.
பல் மற்றும் முக சீரமைப்பு மருத்துவரான எஸ்.எம்.பாலாஜி பிளவு சீரமைப்பிற்காக புரோட்டின்களை வைத்து எலும்பு மற்றும் சதையை மறுபடியும் உருவாக்கும் முறைகளை பற்றி மேற்கொண்ட ஆய்வுகளுக்காக இந்த விருதினை பெற்றுள்ளார்.
2வது முறை அறுவை சிகிச்சை செய்ய நேரிடுவதை தவிர்பதற்கும், செயற்கை பொருட்களை உபயோகிப்பதால் ஏற்படும் சிக்கல்களை தவிர்ப்பதற்கும் டாக்டர் எஸ்.எம்.பாலாஜியின் ஆராய்ச்சி உதவும் எனவும் மாநாட்டில் புகழாரம் சூட்டப்பட்டது.

http://news.lankasri.com/germany/03/177221?ref=ls_d_germany

No comments:

Post a Comment