Wednesday, April 25, 2018

பின் லேடனின் மெய்க்காப்பாளரை ஊக்கத் தொகையுடன் பாதுகாக்கும் ஜேர்மனி: வெளியான தகவல்


சர்வதேச பயங்கரவாதி ஒசாமா பின் லேடனின் மெய்க்காப்பாளரை மாதம் 1000 பவுண்ட்ஸ் ஊக்கத் தொகையுடன் ஜேர்மன் அரசு பாதுகாப்பு அளித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
துனிசிய நாட்டவரான குறித்த நபரை சில பாதுகாப்பு காரணங்களால் அவரது சொந்த நாட்டுக்கு திருப்பி அனுப்ப முடியாத சூழல் இருப்பதாக ஜேர்மன் அரசு குறிப்பிட்டுள்ளது.
இருப்பினும் மிகவும் ஆபத்தானவர் என அடையாளம் காணப்பட்டுள்ளதால் குறித்த நபர் தினசரி பொலிசாரிடம் தகவல் தெரிவிக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது.
ஜேர்மனியில் தஞ்சம் புகுந்துள்ள குறித்த நபர் பலமுறை புகலிட கோரிக்கை விடுத்தும் ஜேர்மன் அரசு நிராகரித்துள்ளது. மட்டுமின்றி அவரை நாடுகடத்தும் உத்தரவையும் ஜேர்மன் அரசு அவரிடம் அளித்திருந்தது.



இருப்பினும் துனிசியாவுக்கு அவர் அனுப்பப்பட்டால் அங்குள்ள அரசாங்கத்தின் கொடூர தண்டனைக்கு உள்ளாகலாம் என ஜேர்மன் நீதிமன்றம் அச்சம்ம் தெரிவித்துள்ளது.
மட்டுமின்றி மனைவி மற்றும் 2 குழந்தைகளுடன் ஜேர்மனியில் தங்கிவரும் அவருக்கு மாதம் 1000 பவுண்ட்ஸ் வரை ஊக்கத்தொகையாக வழங்கி வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
சர்வதேச பயங்கரவாதி ஒருவருக்கு ஜேர்மன் அரசு ஊக்கத்தொகை வழங்கி பாதுகாத்து வருவது தற்போது கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஜேர்மனியின் புகலிட சட்டமானது மிகவும் பலவீனமாக உள்ளது என்பது பயங்கரவாதியை ஊக்கத் தொகை அளித்து பாதுகாப்பதில் இருந்தே அம்பலமாகியுள்ளது என குற்றஞ்சாட்டியுள்ள அரசு நிர்வாகி ஒருவர், அப்பாவி பொதுமக்களின் வரிப்பணத்தில் ஒரு பயங்கரவாதியை பாதுகாப்பதன் நோக்கம் குறித்து நீதிமன்றம் விளக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
எந்த ஒரு நாடும் குறித்த நபருக்கு புகலிடம் தர தயாராக இல்லாத நிலையில், அவர் ஜேர்மனியில் நிரந்தரமாக குடியிருப்பார் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை என தெரிவித்துள்ள Eckhardt Rehberg, இதுபோன்ற ஒரு நபரை ஊக்கத் தொகை அளித்து அரசே பாதுகாக்கிறது என்பது பயங்கரவாத எதிர்ப்பு அமைப்புகளின் முகத்தில் விழுந்த அடி என்றே கணக்காக்கப்படும் என்றார்.
சர்வதேச பயங்கரவாதியின் மெய்க்காப்பாளராக இருந்த ஒரு நபரிடம் நாம் எவ்வாறு நடந்து கொள்கிறோம் என்பதை உலகம் கண்கூடாக பார்த்துக் கொண்டிருக்கிறது என குறிப்பிட்ட அவர், இதுபோன்ற ஒரு இழிநிலை இனி ஜேர்மனிக்கு ஏற்பட வாய்ப்பில்லை என்றார்.
1997 ஆம் ஆண்டு ஒரு மாணவராக ஜேர்மனிக்கு வந்த Sami A, பின்னர் பயங்கரவாத அமைப்புகளுடன் ஏற்பட்ட தொடர்பால் ஆப்கானிஸ்தான் புறப்பட்டு சென்றார்.
அங்கு அவர் ஒசாமா பின் லேடனின் மெய்க்காப்பாளராக பொறுப்பு வகித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

http://news.lankasri.com/germany/03/177281?ref=ls_d_germany

No comments:

Post a Comment