Thursday, November 2, 2017

கனடாவில் புலம்பெயர காத்திருப்பவர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி


கனடாவில் 2020-ஆம் ஆண்டுக்குள் 1 மில்லியன் புலம்பெயர்பவர்களுக்கு புகலிடம் கொடுக்க அந்நாட்டு அரசு முடிவு செய்துள்ளது.

எனவே அடுத்தாண்டு தொடக்கத்திலிருந்து புலம்பெயர்பவர்களின் எண்ணிக்கையானது கனடாவில் அதிகரிக்கும் என தெரிகிறது. மேலும், 2018-ல் புதிதாக நிரந்தர வீட்டுரிமை பெற்றவர்களின் எண்ணிக்கையை 310,000 ஆக்கவும், 2019-ல் 330,000 ஆக்கவும், 2020-ல் 340,000 ஆக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.

இதுகுறித்து கனடிய குடிவரவு அமைச்சர் அஹமத் ஹூசன் விடுத்துள்ள அறிக்கையில், நாட்டின் பொருளாதாரத்தை உயர்த்தவே இத்திட்டத்தை மேற்கொள்ளவுள்ளோம்.

இந்த விடயமானது உலகளாவிய பொருளாதாரத்தில் கனடா முன்னணி நாடாக திகழ உதவியாக இருக்கும்.

நமக்கு திறமையான தொழிலாளர்கள் இன்னும் அதிகளவில் தேவை, அதே போல கனடா பொருளாதாரத்தை பலப்படுத்துவதற்கு அதிகமான மக்கள் தேவை.

மக்களை அதிகளவில் நாட்டில் அனுமதிப்பதன் மூலம் தொழிலாளர் சந்தை பற்றாக்குறைக்கு தீர்வு கிடைக்கும் என தெரிவித்துள்ளார்.

ஆசியா மற்றும் மத்திய கிழக்கு பகுதியிலிருந்து தான் அதிகளவு மக்கள் கனடாவுக்கு புலம் பெயர வருகிறார்கள் எனவும், 2036-ல் கனடிய ஜனத்தொகையில் 30 சதவீதம் பேர் வேறு இடத்திலிருந்து புலம்பெயர்ந்தவர்களாக தான் இருப்பார்கள் எனவும் புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன.
http://news.lankasri.com/canada/03/135913

No comments:

Post a Comment