Wednesday, April 1, 2015

விபத்துக்குள்ளான ஜேர்மன்விங்ஸ் விமானத்தினுள் பதிவு செய்யப்பட்ட காணொளி? அலறும் பயணிகள்



பிரான்ஸ் நாட்டு அல்ப்ஸ் மலையில் மோதி அண்மையில் விபத்துக்குள்ளான ஜேர்மன்விங்ஸ் விமானத்திற்குள்ளிருந்து பதிவு செய்யப்பட்டதாகக் கூறப்படும் காணொளியொன்று கிடைக்கப் பெற்றுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
கையடக்கத் தொலைபேசி ஊடாக பதிவு செய்யப்பட்டதாகக் கூறப்படும் இந்தக் காணொளி தம்மிடம் உள்ளதாக பிரான்ஸ் நாட்டு ஊடகமான பெரிஸ் மட்ச் மற்றும் ஜெர்மன் ஊடகமான பெல்ட் என்பவைகளே இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளன. 
குறித்த காணொளியை தாம் பார்வையிட்டதாகவும் விபத்து நடந்த இடத்தில் இருந்த ஒருவரின் ஊடாக இதனை பெற்றுக் கொண்டதாக பெரிஸ் மெட்ச் ஊடகம்ட தெரிவித்துள்ளது.
விமானத்தில் பயணித்தோர் பயத்தில் அலறுவதும், அவர்கள் தமக்கு நடக்கப் போவது தொடர்பில் அவதானத்துடன் இருந்தமையையும் காணொளியைப் பார்க்கும் போது தெளிவாக புரிவதாக பெரிஸ் மெட்ச் தெரிவித்துள்ளது.
இறுதியில் விமானம் மோதும் சத்தமும் அத்துடன் பயணிகளின் அலறல் சத்தமும் அதிகரிப்பது அந்தக் காணொளியில் தெளிவாகக் கேட்பதாக தெரிவிக்கப்படுகிறது.
ஜேர்மன்விங்ஸ் விமானம் 150 பயணிகளுடன் கடந்த 24ம் திகதி அல்ப்ஸ் மலையில் மோதி விபத்துக்குள்ளானமை குறிப்பிடத்தக்கது.
வேண்டுமென்றே வீழ்த்தப்பட்ட விமானம்! ஊழிக்காலத்தை நோக்கி உலகம் செல்கின்றதா?  [ 26 மார்ச் 2015 ]
ஸ்பெயின் பார்சிலோனாவிருந்து ஜேர்மனி டுசில்டோவ்வுக்குப் பறந்த ஜேர்மனி விங்ஸ் விமானம் அபாய ஒலியை எழுப்பியதை அடுத்து அல்ப்ஸ் மலையில் மோதி விழுந்து நொருங்கியதால் 150 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.
இது தொடர்பில் லங்காசிறியின் நிஜத்தின் தேடல் ஆய்வாளர் சுதர்மா மேலும் பற்பல விசயங்களை விபரித்திருக்கின்றார்.
http://www.tamilwin.com/show-RUmtyETVSUkpyC.html

No comments:

Post a Comment