ரொறொன்ரோ- ஒன்ராறியோவில் மிக பிரபல்யமான மேப்பிள் லொட்ஜ் பண்ணையில் கோழிகளை துன்புறுத்துவதாக குற்றச்சாட்டுக்கள் வெளியாகியுள்ளது. கோழிகளை வெட்டுவதற்கு முன்னர் அவை கொடுமைபடுத்தப் படுவது குறித்த வீடியோ காட்சிகள் ஒரு விலங்கு உரிமைகள் குழவினரால் வெளியிடப்பட்டுள்ளது.பிரம்ரன், ஒன்ராறியோவில் உள்ள கோழிகள் வெட்டும் இடத்தில் கோழிகளை வெட்டுவதற்கு முன்னர் அவைகளை கொடுமைப் படுத்தி துன்புறுத்துவது மறைக்கப்பட்ட கமரா காட்சிகள் மூலம் தெரியவந்துள்ளதாக Mercy for Animals விலங்கு உரிமைகள் குழவினர் தெரியப்படுத்தி உள்ளனர்.
வெட்டுமிடத்தற்கு அனுப்ப முன் பறவைகளை குளிரில் விட்டு சாக வைப்பதாகவும் கூறப்பட்டுள்ளது.
கோழிகளின் கால்கள், தலைகள் மற்றும் செட்டைகளை கூட்டின் கதவுகளிற்கிடையில் புகுத்தப்பட்ட நிலையில் காணப்பட்டதாகவும் அவைகளை சங்கிலிகளால் கட்டுதல் மற்றும் மோதி அடித்தல் போன்ற துன்புறுத்தல்களை செய்வதாகவும் கண்டறியப்பட்டுள்ளது. கோழிகளை இறைச்சிக்காக கழுத்தை நெரிக்க முன்னர் இத்தகைய கொடுமைகள் செய்யப்டுகின்றன.இதன் பின்னரே அவை கடைகளில் விற்பனைக்கு செல்கின்றன.
மேப்பிள் லொட்ஜ் பண்ணையில் இவ்வாறு நடப்பது இது முதல் தடவை இல்லை எனவும் கூறப்பட்டுள்ளது.
இது குறித்து உண்மைகளை சரிபார்க்க உடனடி நடவடிக்கை எடுத்துள்ளதாக பண்ணையின் தலைமை நிர்வாக அதிகாரி மைக்கல் புரொவ்ஸ் தெரிவித்துள்ளார்.
farm2farm3farmfarm1