ஒட்டாவா- கடந்த நான்கு வருடங்களிற்கு மேலாக கனடாவில் தங்கியிருந்த தற்காலிக வெளிநாட்டு பணியாளர்களின் அனுமதி இன்று காலாவதியாவதால் ஆயிரக்கணக்கானவர்கள் நாட்டை விட்டு வெளியேற விமான நிலையம் நோக்கி புறப்பட வேண்டிய நிலைமைக்கு ஆளாகியுள்ளனர்.
குறைந்த திறமை பணிகள் செய்துவந்த வெளிநாட்டவர்கள் நிரந்தர வதிவுரிமை பெற அல்லது நாட்டைவிட்டு வெளியேற வேண்டிய காலக்கெடு ஏப்ரல் 1, 2015 என கோன்சவேட்டிவ் அரசாங்கம் அறிவித்திருந்தது. 2011-ல் இதற்கான சட்டங்கள் மாற்றப்பட்டதன் பின்னர் இப்புதிய முறை நடைமுறைக்கு வந்தது.
முன்னர் இவர்கள் மிண்டும்-விண்ணப்பிக்க வேண்டும் என்று மட்டும் இருந்தது,ஆனால் புதிய சட்டம் மீண்டும்-விண்ணப்பிக்க இவர்கள் குறைந்தது நான்கு வருடங்களிற்கு  நாட்டை விட்டு வெளியேற வேண்டும் என கேட்கின்றது.
இது நாடு பூராகவும் ஒரு அதிரலையான விளைவை எற்படுத்தியுள்ளது.
அல்பேர்ட்டாவில் மட்டும் 10,000 தற்காலிக பணியாளர்கள் கனடாவில் தங்குவதற்கு விண்ணப்பித்தனர். ஆனால் மாகாணத்திடம் அதற்கான ஒரு தாராள திட்டத்தையோ அல்லது ஏற்றுக்கொள்ள போதுமான விரைவில் இருக்கவில்லை எனவும் கூறப்பட்டுள்ளது.
பிரிட்டிஷ் கொலம்பியாவில் புதிய சட்டம்  குடிவரவு அதிகாரிகளிற்கு ஒரு பின்னுறுத்தலை ஏற்படுத்தியுள்ளது.
temtem1