சட்டவிரோதமான முறையில் ஒருதொகை வல்லப்பட்டையை வெளிநாட்டுக்கு கடத்த முயன்ற நபர் ஒருவர், கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த நபர், இன்று காலை டுபாய் நகரத்திற்கு பயணிக்க முற்பட்ட போதே சுங்க அதிகாரிகளினால் கைது செய்யப்பட்டுள்ளார்.
சந்தேகநபரிடமிருந்து 19 கிலோவும், 300 கிராம் எடையுமுள்ள வல்லப்பட்டை கைப்பற்றப்பட்டுள்ளது. குறித்த வல்லப்பட்டையின் பெறுமதி 9 மில்லியன் எனவும் குறிப்பிடப்படுகின்றது.
கைது செய்யப்பட்டவர் கொழும்பு பிரதேசத்தை சேர்ந்த 40 வயதுடைய ஒருவர் என தெரிவிக்கப்படுகின்றது.
சந்தேகநபர், தனது பயணப் பொதியில் மறைத்து வைத்து வல்லப்பட்டைகளை கடத்த முயன்றுள்ளதாக சுங்க பிரிவின் ஊடக பேச்சாளர் லெஸ்லி காமினி தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment