Saturday, April 4, 2015

கனடா வாழ வைப்போம் அமைப்பூடாக வைத்திலிங்கம் அறக்கட்டளை முள்ளந்தண்டு பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவி



போரால் முள்ளந்தண்டு பாதிக்கப்பட்டு அர்ப்பணிப்புக்களின் அடையாளமாக இருப்பவர்களில் 20 பேருக்கு உதவிகள் வழங்கப்பட்டுள்ளன.
பா.உறுப்பினர் சி.சிறீதரனின் வேண்டுகோளுக்கிணங்க கனடா வாழ வைப்போம் அமைப்பூடாக வைத்திலிங்கம் அறக்கட்டளை அமரர் வைத்திலிங்கம் அவர்களின் ஓராண்டு நினைவாக, அவரது குடும்பத்தாரால் இன்று கிளிநொச்சியில் வைத்து உதவிகள் வழங்கப்பட்டுள்ளன.
இந்த நிகழ்வு கிளிநொச்சியில் தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் செயலகமான அறிவகத்தில் பா.உறுப்பினர் சி.சிறீதரனின் செயலாளரும் கட்சியின் மாவட்டக்கிளையின் உபதலைவருமான பொன்.காந்தன் தலைமையில் நடைபெற்றது.
இதில் வடமாகாண சபை உறுப்பினர் சு.பசுபதிப்பிள்ளை, கரைச்சி பிரதேசசபை உறுப்பினர் ப.குமாரசிங்கம், முள்ளந்தண்டு பாதிக்கப்பட்டவர்களின் குடும்பங்கள் மற்றும் பிரதிநிதிகள் கலந்துகொண்டனர்.
இதில் கலந்துகொண்ட வடமாகாண சபை உறுப்பினர் சு.பசுபதிப்பிள்ளை உரையாற்றுகையில்,
அர்ப்பணிப்பின் அடையாளங்களாக இருக்கின்ற உங்களை நினைந்து என்றும் எங்கள் வாழ்வில் அக்கறையுடன் செயற்படும் கனடா வாழ வைப்போம் அமைப்பூடாக வைத்திலிங்கம் அறக்கட்டளை அமரர் வைத்திலிங்கம் அவர்களின் நினைவாக செய்திருக்கும் இந்த நல்ல காரியத்திற்கு எம் நன்றிகள்.
நிலத்தில் இருக்கும் வரலாறுகளை காக்கின்ற பணியாக இது அமைக்கின்றது. முள்ளந்தண்டு வடம் பாதிக்கப்பட்டவர்கள் வாழ்வு அதிகம் மதிக்கப்பட வேண்டியது. அவர்களின் பிள்ளைகளை கல்வியிலும் பொருளாதாரத்திலும் உயர்ந்த இடத்திற்கு கொண்டு செல்லும் கடமை எம்மிடம் உண்டு.
இன்று வடக்கு கிழக்கில் வாழுகின்ற தமிழர்களின் வாழ்வை மேம்படுத்த புலம்பெயர் தமிழர்களால் முடியும். ஆனால் ஒரு வடக்கு மாகாண சபை கிழக்கு மாகாண சபை போன்ற பொது அமைப்புக்கள் ஊடாக வெளிநாட்டு நிதியை பெற்றுக்கொள்ளும் ஏற்பாடுகள் அரசாங்கத்தால் அனுமதிக்கப்படவில்லை.
மத்திய அரசின் கடிவாளங்களுக்கு ஊடாகவே வடக்கு கிழக்கிற்கு புலம் பெயர் மக்களின் நிதிவர வேண்டிய நிர்ப்பந்தம் காணப்படுவதால், புலம்பெயர் மக்கள் நினைக்கின்ற பெருமளவு உதவி தொடர்பான முனைப்புக்கள் செயல் வடிவம் பெறமுடியவில்லை.
ஆயினும் இங்கு இருக்கின்ற மக்கள் பிரதிநிதிகள் மற்றும் அமைப்புகள் ஊடாக குறிபிட்ட அளவில் செய்கின்ற உதவிகளே இங்கே பேருதவிதாக அமைக்கின்றது.
வைத்திலிங்கம் அறக்கட்டளையினர் தொடர்ந்தும் இந்த நல்ல காரியங்களை முன்னெடுப்பார்கள் என எமது மக்கள் நம்புகின்றார்கள் என தெரிவித்தார்.

No comments:

Post a Comment