Thursday, January 1, 2015

ஏர்-ஏசியா விமானம் விழப்போவதை 13 நாட்களுக்கு முன்பே எச்சரித்த மர்ம சீன நபர் !

ஏசியா விமானம் மாயமாக மறைந்தது என்பது மாறி, விமானம் ஜாவா பகுதி கடலில் வீழ்ந்தது என்பது தற்போது உறுதியாகி உள்ளது. மோசமான காலநிலை காரணமாக விமானம் வீழ்ந்திருக்கலாம் என்று ஊகிக்கிறார்கள், உறுதி செய்யவில்லை. விமானம் வீழ்ந்தபோது விமானிகள் என்ன செய்துகொண்டு இருந்தார்கள்? எதற்காக அந்த அபாயப் பாதையில் பறந்தார்கள்? ஏன் தரைக்கு அபாய அறிவிப்பு செய்யவில்லை? இந்தக் கேள்விகளுக்கு இன்னும் பதில் இல்லை. மர்மம் தொடர்கிறது.
இப்படியான நேரத்தில், மற்றொரு தகவல் சீனாவில் தற்போது பரபரப்பாக அடிபடுகிறது. அதற்கு காரணம், இந்த விபத்து நடப்பதற்கு 13 நாட்களுக்கு முன்பே, சீன மொழியில் எழுதப்படும் இணையத்தள ஃபோரம் ஒன்றில், “அடுத்த இலக்கு ஏர்-ஏசியாதான். சீன பயணிகள் ஏர்-ஏசியாவில் ஏறி பலியாகாதீர்கள்” என எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்தது என்கிறார்கள்!
இந்த எச்சரிக்கை மிக தெளிவாக எழுதப்பட்டுள்ளது.
‘சர்வதேச கறுப்பு கரம்’ ஒன்று சதித்திட்டம் ஒன்றை வகுத்து செயல்படுத்துகிறது. மலேசியா ஏர்லைன்ஸின் இரு விமானங்களில் ஒன்று (MH370) காணாமல் போனது. மலேசியாவின் மற்றொரு விமானம் (MH17) சுட்டு வீழ்த்தப்பட்டது. இதற்கு அடுத்ததாக, ‘சர்வதேச கறுப்பு கரம்’ குறிவைக்கப் போவது ஏர்-ஏசியா விமானமாகவே இருக்கும்.
அதற்காக ஏர்-ஏசியாவின் எந்தவொரு விமானத்தை வீழ்த்தினாலும், அது மலேசியாவின் ஏர்-ஏசியா நிறுவனத்துக்கே பாதிப்பை ஏற்படுத்தும். இதனால், சீன பயணிகளுக்கு நாம் பரிந்துரை செய்வது – ஏர்-ஏசியா விமானங்களில் பயணம் செய்யாதீர்கள், மற்றொரு மலேசியா ஏர்லைன்ஸ் MH370 பயணியாக காணாமல் போகாதீர்கள்.
இப்படி ஒரு அறிவிப்பு, ஏர்-ஏசியா விமானம் வீழ்வதற்கு 13 தினங்களுக்கு முன்பே வெளியாகியிருந்தது என்று, சீன மொழி பத்திரிகைகள் செய்தி வெளியிட, இப்போது சீனாவில் இதுதான் பரபரப்பாக அடிபடும் விஷயமாக உள்ளது. குறிப்பிட்ட சீன மொழி இணையத்தள பக்கத்தை 3 மில்லியனுக்கு மேற்பட்ட தடவைகள் பார்வையிட்டுள்ளனர் என அதில் ஒரு ரீடிங் உள்ளது.
http://www.athirvu.com/newsdetail/1766.html

மாயமான ஏர்-ஏசியா ஏர்பஸ் விமானம்பற்றி இதுவரை கிடைத்துள்ள அப்டேட்: லண்டன் நேரப்படி 23.11 திங்கள் !

[ Dec 30, 2014 08:33:05 AM | வாசித்தோர் : 14065 ]
மாயமாக மறைந்து போன ஏர்-ஏசியா விமானத்தின் எந்த தடயமும் இந்த நிமிடம் வரை கிடைக்கவில்லை. இன்று காலை தொடங்கிய தேடுதல் நடவடிக்கை, இருள் சூழ்ந்த காரணத்தால் நிறுத்தப்பட்டுள்ளது. மீண்டும் நாளை (திங்கட்கிழமை) காலை 6 மணிக்கு, காலநிலை அனுமதிக்கும் பட்சத்தில் தேடுதல் நடவடிக்கை தொடங்கும் என இந்தோனேசிய அதிகாரிகள் அறிவித்துள்ளனர்.

  • விமானம் தரையுடன் தொடர்புகளை இழந்த நேரத்தில், விமானத்தை 38,000 அடி உயரத்துக்கு உயர்த்துமாறு ஜக்கார்த்தா ஏர்-ட்ராஃபிக் கன்ட்ரோல் டவரில் இருந்தவர்கள் கொடுத்த அறிவுறுத்தலின் காரணம், 32,000 அடி முதல், 37,000 அடி வரை கடுமையாக மேகக்கூட்டம் காணப்பட்டது என்ற தகவல் வெளியிடப்பட்டுள்ளது.
  • காணாமல் போன ஏர்பஸ் A320-200 விமானம் 38,000 அடி உயரத்தில் பறப்பதில் எந்த சிக்கலும் கிடையாது. அதிகபட்சம் 40,000 அடி வரை ஸ்ட்ரோல் பண்ணாமல் பறக்கும் வகையில் உருவாக்கப்பட்ட விமானம் அது.
  • இன்றிரவு இந்தோனேசிய துணை ஜனாதிபதி யூசுப் காலா நடத்திய செய்தியாளர் மாநாட்டில், “மாயமான விமானம் விபத்துக்குள்ளாகி கடலில் வீழ்ந்திருக்கலாம் என்பது ஒரு ஊகம்தானே தவிர, இந்த நிமிடம் வரை அதை உறுதி செய்ய எந்தவொரு தகவலும் எம்மிடம் இல்லை” என்றார்.
  • காணாமல் போயுள்ள ஏர்பஸ் A320-200 விமானம், மலேசிய விமான நிறுவனம் ஏர்-ஏசியாவின் இந்தோனேசிய இணை நிறுவனத்துக்கு (AirAsia Indonesia), கடந்த அக்டோபர் 2008-ம் ஆண்டு டிலிவரி செய்யப்பட்டது என ஐரோப்பிய விமான தயாரிப்பு நிறுவனம் ஏர்பஸ் தெரிவித்துள்ளது. அதாவது, அது ஓரளவு புதிய விமானம்.
  • இந்த விமானம் சுமார் 6 வாரங்களுக்கு முன், நவம்பர் 16-ம் தேதி, வழமையான மெயின்டனேன்ஸ் செக்-க்கு அனுப்பப்பட்டு, எந்த மெயின்டனென்ஸ் கோளாறும் கிடையாது என ரிப்போர்ட் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த தகவலை ஏர்-ஏசியா உறுதி செய்துள்ளது.
  • ஏர்-ஏசியாவின் சி.இ.ஓ. டோனி பெர்னான்டஸ், “இந்த கணம்வரை எமது விமானத்துக்கு என்ன ஆயிற்று என்பது தெரியாது. எமக்கு உறுதியான பதில் கிடைக்கும்வரை, வதந்தகளை தவிர்த்துக் கொள்ளவும்” என மீடியா ப்ரீஃபிங்கில் செய்தியாளர்களை கேட்டுக்கொண்டார்.
  • http://www.athirvu.com/newsdetail/1755.html


  • No comments:

    Post a Comment