Thursday, January 1, 2015

"சாவி குலுக்கி" ஆண்களைத் தேர்வு செய்யும் பெண்கள் நிகழ்ச்சி தவறான தகவலால் பரபரப்பு !

குறிப்பாக மேற்குலக நாடுகளில் ஒரு சுவாரசியமான கழியாட்ட பார்டி உள்ளது. ஜோடிகள் காரில் வரவேண்டும். அவ்வாறு பல ஜோடிகள் காரில் வருவார்கள். பின்னர் அவர்கள் ஒரு வீட்டில் அல்லது விடுதியில் கூடி, அங்கே உள்ள ஒரு சட்டியில் தமது கார் திறப்பை போட்டு விடுவார்கள். பின்னர் பெண்கள் எழுந்துசென்று தமக்கு பிடித்த திறப்பை எடுப்பார்கள். அந்த கார் திறப்புக்கு சொந்தக்காரணான ஆண் அப்பெண்ணுடன் சென்று உல்லாசமாக இருக்கவேண்டும். இது தான் சாவி குலுக்கல் பார்டி ஆகும்.
கோவை மாவட்டத்தில் "கீ"டிரா எனப்படும் சாவி குலுக்கி ஆண்களை பெண்கள் தேர்வு செய்யும் நிகழ்ச்சி நடைபெறுகிறது என்ற வெளியான தகவல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்து மக்கள் கட்சி தமிழக மாநில தேர்தல் பிரிவு செயலாளர் பொன்.கார்த்திகேயன் என்வர் தனது முகநூல் பக்கத்தில், "கீ டிரா நடத்தினால், நடத்தப்படும் இடம் தரைமட்டமாக்கப்படும். கோவை செட்டிபாளையத்தில் அமைந்துள்ள கால்ப்கிளப்பில் டிசம்பர் 31 நள்ளிரவு 12 மணிக்கு சாவிக்குலுக்கல் நடைபெறவுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது என்று எழுதி பெரும் சர்சையை தோற்றுவித்துள்ளார்.
ஆனால் பின்னர் அவரே பேஸ் புக்கில் போட்ட அனைத்தையும் நீக்கிவிட்டார். ஏன் என்றால் இவ்வாறு எதுவும் நடக்கவில்லை என்று குறித்த அந்த கிளப் உறுதிசெய்துள்ளது. இது ஒரு வதந்தியே. ஆனால் பாருங்கள் ஒருவிடையம். குறித்த அந்த கிளப்புக்கு பலர் சென்றுள்ளார்கள். எல்லாம் ஒரு ஆர்வக்கோளாறில் தான்.
http://www.athirvu.com/newsdetail/1768.html

No comments:

Post a Comment