Sunday, November 9, 2014

ஆசிரியையின் மகளை பலாத்காரம் செய்த காட்சியை ஆசிரியைக்கே அனுப்பிய மாணவன்!

பெங்களூரில் டியூஷன் ஆசிரியையின் மகளை பலாத்காரம் செய்து அதை சி.டியில் பதிவு செய்து ஆசிரியைக்கு அனுப்பி வைத்த மாணவனை பொலிசார் கைது செய்துள்ளனர்.
பெங்களூர் மாகடிசாலையை சேர்ந்த பீரவீன்குமார் (24). இவர் எம்.பி.ஏ முடித்துவிட்டு எம்.என்.சி வங்கியில் பணியாற்றி வருகிறார். பிரவீன்குமார் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் பலாத்கார சம்பவத்தில் ஈடுபட்டுள்ளார்.
அதை காணொளியாக பதிவும் செய்துள்ளார். இவர் பியுசி படிக்கும்போது அவர் தங்கியுள்ள பகுதியில் ஓர் ஆசிரியையிடம் டியூசனுக்கு சென்றுள்ளார்.
ஆசிரியையின் மகள் மீது ஆசைப்பட்ட பிரவீன்குமார் அவருடன் நட்பு ரீதியில் முதலில் பழகினார். கல்லூரியில் படித்து வரும் ஆசிரியையின் மகள் கலா ,பிரவீன்குமாருடன் சகஜமாக பழகிவந்தார்.
இந்நிலையில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம், கலாவை தொடர்பு கொண்ட பிரவீன்குமார், பிறந்தநாள் பார்ட்டிக்கு வரும்படி அழைப்பு விடுத்தார். இதை ஏற்ற கலா, மாகடி சாலையில் உள்ள பிரவீன்குமார் வீட்டுக்கு சென்றுள்ளார்.
ஆனால், பிரவீன்குமார் வீட்டில் யாரும் இல்லை. பிறந்தநாள் பார்ட்டி என்று அழைத்தாய், வீட்டில் வேறு யாரும் இல்லையா என்று கலா கேட்டுள்ளார்.
எல்லாரும் இப்போது வந்துவிடுவார்கள், அதுவரை குளிர்பானம் பருகலாம் என்று கலாவுக்கு மயக்க மருந்து கலந்த குளிர்பானத்தை குடிக்க கொடுத்துள்ளார்.
குளிர்பானம் குடித்த கலா சற்று நேரத்தில் மயங்கினார். இதை சாதகமாக பயன்படுத்தி கொண்ட பிரவீன்குமார், அவரை பலாத்காரம் செய்துள்ளார்.
மேலும் அதை காணொளியாகவும் பதிவும் செய்துள்ளார். மயக்கம் தெளிந்து எழுந்த கலா, நடந்த சம்பவங்களை அறிந்து பிரவீன்குமாரை கண்டபடி திட்டிவிட்டு வீட்டுக்கு சென்றுவிட்டார்.
இச்சம்பவம் குறித்து பெற்றோரிடம் சொல்லாமல் மறைத்துவிட்டார். இதற்கிடையில் கலாவை அடிக்கடி தொடர்பு கொண்ட பிரவீன்குமார் தன்னை திருமணம் செய்து கொள்ளும்படி மிரட்டியுள்ளார்.
இதற்கு மசியாத கலா, திருமணத்துக்கு மறுத்துள்ளார். இந்நிலையில் அக்டோபர் 31ம் திகதி கைப்பேசியில் பதிவு செய்த பலாத்கார காட்சியை சிடியாக தயார் செய்து கலாவின் தாயாரும், தனக்கு டியூஷன் சொல்லி தந்த ஆசிரியைக்கு பிரவீன்குமார் அனுப்பி வைத்துள்ளார்.
கானொளி காட்சிகளை பார்த்த கலாவின் தாய் அதிர்ச்சியடைந்தார். சம்பவம் குறித்து கலாவிடம் விசாரித்துவிட்டு, பொலிசில் புகார் அளித்தார்.
ஆதாரங்களை பறிமுதல் செய்த பொலிசார் பிரவீன்குமாரை கைது செய்தனர். அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி பொலிஸ் காவலில் எடுத்து விசாரித்து வருகின்றனர்.

No comments:

Post a Comment