பின் லாடனை பாக்கிஸ்தானில் வைத்து அவரது வீட்டில் சுட்டுக்கொன்றது அமெரிக்க சீல் படையினர். சுட்டது யார் என்பதனை இதுவரை காலமும் சிதம்பர ரகசியமாக வைத்திருந்தார்கள். ஆனால் சில நாட்களுக்கு முன்னர் அமெரிக்க படையில் இருக்கும் ஒருவர், தானே பின் லாடனை சுட்டதாக பரபரப்பு பேட்டி ஒன்றை மீடியாவுக்கு கொடுத்து புகழ்தேட ஆரம்பித்தார். ஆனால் இனியும் மெளனமாக இருந்தால் உண்மையாக யார் சுட்டார்கள் என்ற விடையம் பொய்யாகிப்போகும் என்று தெரிந்துகொண்ட அமெரிக்க படையினர். சுட்டவர் இவர்தான் என்று உண்மையான ஆளை அடையாளப்படுத்தியுள்ளார்கள். அவர் பெயர் "ஓ நில்" . புகைப்படமும் வெளியாகியுள்ளது.
பின் லாடன் பாக்கிஸ்தானில் ஒரு பண்ணை வீட்டில் தங்கி இருந்தார். அவரது மெய்பாதுகாப்பாளர்களை எல்லாரையும் சுட்டுவிட்டு உள்ளே நுளைந்த ஒ நில் மற்றும் அவரது குழுவினர் இறுதியாக பின் லாடன் அறைக்கு சென்றுள்ளார்கள். முதலில் கதவை உதைத்து திறந்து உள்ளே சென்றது ஓ நில் என்னும் நபர் தான். அவரே இறுதியாக பின் லாடனை சுட்டுக் கொலைசெய்தும் உள்ளார். அவர் பின் லாடனை சுட முன்னர் பின் லாடனின் ரத்த மாதிரி எடுக்கப்பட்டுள்ளது. அப்போது அவர் பயந்து நடுங்கியதாகவும், சாவுக்கு பயப்படும் ஒரு நாய் குட்டி போல அவர் இருந்தார் என்று ஓ நில் மேலும் தெரிவித்துள்ளார்.
பின் லாடன் கண்களில் சாவின் பயத்தை தான் பார்த்ததாக அவர் தெரிவித்துள்ளார். பின்னர் அவரை சுட்டு விட்டு அவரது உடலை உலங்கு வானூர்தியில் ஏற்றியுள்ளார்கள்.
No comments:
Post a Comment