Sunday, November 9, 2014

இன்று பிரித்தானிய மகாராணியைக் கொல்ல முஸ்லீம் தீவிராதிகள் சதியா ?

முதலாம் உலகப்போரில் கொல்லப்பட்டவர்கள் நினைவு தினத்தை, வயிட்ஹால் பகுதியில் கொண்டான பிரித்தானிய மகாராணி தயாராகி வருகிறார். அந்த இடத்தில் ரெட் பொப்பி யை வைத்து அவர் வருடா வருடம் மரியாதை செலுத்துவது வழக்கம். இன்று நடைபெறவுள்ள அன் நிகழ்வில் மகாராணியைக் கொல்ல சில முஸ்லீம் தீவிரவாதிகள் சதித்திட்டம் தீட்டியுள்ளதாக பிரித்தானிய உளப்பிரிவான Mஈ6 தெரிவித்துள்ளது. அவர்கள் இதுதொடர்பாக பொலிசாருக்கு தெரிவித்த தகவலை அடுத்து ஹைவெ-கோம் என்னும் இடத்தில் ஒரு இளைஞர் கைதுசெய்யப்பட்டார். அவர் கொடுத்த தகவலுக்கு அமைவாக ஹவுன்சிலோ என்னும் இடத்தில் மேலும் ஒரு முஸ்லீம் இளைஞர் காதாகியுள்ளார்.
இது தொடர்பாக மேலும் சிலர் கைதாகியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இருப்பினும் என்ன நடந்தாலும் தான் சென்று மலர் வளையம் வைப்பதை எவராலும் தடுக்க முடியாது என்று மகாராணி கட்டாயமாக கூறிவிட்டார். முடிந்தால் பாதுகாப்பு தாருங்கள் இல்லையென்றால் தேவையில்லை. நான் நிச்சயம் செல்வேன் என்று அவர் ஆணித்தரமாக கூறிவிட்டார். இது எனது நாடு இங்கேயே பாதுகாப்பு இல்லை என்று கூறி என்னை தடுக்கவேண்டும் என்று அவர் கூறியதை அடுத்து, நிகழ்வு நடக்கவுள்ள பகுதியை சுற்றி பாரிய பொலிஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. முன்னேப்பொழுதும் இல்லாதவாறு பல அடுக்கு பாதுகாப்பை பொலிசார் போட்டுள்ளார்கள் என அதிர்வு இணையம் மேலும் அறிகிறது.
நினைவு தின நிகழ்வுகள் திட்டமிடப்பட்ட படி நடக்கும் என்று அரசாங்கம் அறிவித்துள்ளது.
http://www.athirvu.com/newsdetail/1399.html

No comments:

Post a Comment