Tuesday, November 18, 2014

பள்ளி மாணவன் மேல் காதல் கொண்ட கல்லூரி மாணவி: தீர்வாக வந்த மரணம்!


ராமநாதபுர மாவட்டத்தில் காதல் பிரச்சனையால் இரு காதலர்கள் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டனர்.
ராமநாதபுரம் கருவேப்பிலைகார தெருவைச் சேர்ந்தவர் முத்துராமு. இவரது மகள் சண்முகப்பிரியா (18). ராமநாதபுரம் அரசு மகளிர் கலை கல்லூரியில் பிஏ முதலாமாண்டு படித்து வருகிறார்.
அதே பகுதியைச் சேர்ந்தவர் கோவிந்தராஜ். இவரது மகன் சிந்துபாலா (17) தனியார் பள்ளியில் பன்னிரண்டாம் வகுப்பு படித்து வருகிறார்.
சண்முகப்பிரியாவும், சிந்துபாலாவும் காதலித்துள்ளனர். இதற்கு இருவரது பெற்றோரும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். சண்முகப்பிரியாவுக்கு திருமணம் செய்ய அவரது பெற்றோர் ஏற்பாடு செய்துள்ளனர்.
இதனால், மனமுடைந்த காதலர்கள் நேற்று அதிகாலை வீட்டை விட்டு வெளியேறி, காலை 6.30 மணியளவில் ராமநாதபுரம் ரயில் நிலையத்துக்கு 2 கிலோ மீற்றருக்கு முன், தண்டவாளம் அருகே இருவரும் நடந்து சென்றுள்ளனர்.
அப்போது வந்த திருப்பதி - ராமேஸ்வரம் எக்ஸ்பிரஸ் ரயில் முன்பு திடீரென இருவரும் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டனர்.
இதனைத் தொடர்ந்து ராமநாதபுரம் ரயில்வே பொலிசாருக்கு ரயில் ஓட்டுநர் தகவல் தெரிவித்ததன் பேரில் பொலிசார், வந்து உடல்களை மீட்டு ராமநாதபுரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
18 வயது கூட நிரம்பாத காதலர்கள், பெற்றோர் எதிர்ப்புக்கு பயந்து ரயில் முன்பு பாய்ந்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

No comments:

Post a Comment