Tuesday, November 18, 2014

1090ம் ஆண்டில் 19ம் திகதி என்ன கிழமை: சொல்கிறான் அதிசய சிறுவன்!

சென்னையை சேர்ந்த 10 வயது சிறுவன் ஒருவன், 1090 ஆண்டுகளில் ஏதாவது ஒரு திகதியை கூறி, கிழமை கேட்டால் சொல்வது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை கொளப்பாக்கத்தை சேர்ந்த சேசுராமுன் திமை குறித்து கேட்டால், தெரியவில்லை என்ற பதில் தான் கிடைக்கிறது.
மகனின் திறமை குறித்து தந்தை கோபாலகிருஷ்ணன் கூறியதாவது, நான் ஒரு தனியார் நிறுவன ஊழியர். கடந்த, ஏப்ரல் மாதம் பள்ளி கோடை விடுமுறையில், சொந்த ஊரான ஈரோட்டிற்கு குடும்பத்துடன் செல்ல வேண்டி இருந்தது.
சேசுராமை அழைத்துக்கொண்டு ரயில் டிக்கெட் முன்பதிவு செய்ய சென்றேன். நான் கேட்ட திகதியில் டிக்கெட் இல்லை என்பதால், 20 நாட்களுக்கு பின், ஒரு திகதியில் டிக்கெட் இருப்பதாக முன்பதிவாளர் கூறினார்.
அன்றைய திகதி என்ன கிழமை என, தெரிந்துகொள்ள அலைபேசியில், தேட முயன்றேன். அதற்குள் சேசுராம், கிழமையை கூறிவிட்டான்.
அடுத்த வாரத்தில் உள்ள குறிப்பிட்ட திகதியின் கிழமையை கூறவே, ஒரு நிமிடமாவது கணக்கு போட வேண்டும். 2௦ நாளுக்கு பின் உள்ள திகதியின் கிழமையை மறுநொடியே அவன் கூறியதும், அவனுக்குள் எதோ ஒரு திறமை ஒளிந்திருக்கிறது என தெரிந்து கொண்டோம்.
பிறகு, ஒவ்வொரு ஆண்டு வாரியாக திகதிக்கு கிழமை கேட்டோம். 2010 முதல் 3100ம் ஆண்டு வரை உள்ள, ஏதாவது ஒரு திகதியை கேட்டால், யோசிக்காமல் மறு நொடியே அந்த நாளுக்கான கிழமையை கூறுகிறான் என்று தெரிவித்துள்ளார்.
தாயார் தமிழ்ச்செல்வி கூறுகையில், ஓர் ஆண்டுக்கு முன் குறிப்பிட்ட திகதியில் அவன் என்ன நிற உடை அணிந்தான், நான் என்ன குழம்பு வைத்தேன் என்பதையும் கூறுகிறான்.
ஒரு பாடலை கேட்ட உடனே, எந்த பாடகர் பாடினார் என கூறிவிடுகிறான். ஒரேநாளில், 1 முதல் 100 வரை உள்ள இந்தி வார்த்தைகளை மனப்பாடம் செய்துவிட்டான். 3100ம் ஆண்டுக்கு மேல்உள்ள காலண்டர் கிடைக்காததால், அடுத்தடுத்த ஆண்டுகளுக்கான கிழமை குறித்து கேட்க முடியவில்லை என்று கூறியுள்ளார்.

No comments:

Post a Comment