Tuesday, November 18, 2014

வடக்கில் ஆளுக்கொரு மரம் நடுவதில் ஆர்வம் காட்டும் மக்கள்!

போரின்போது அழிந்து போன தம் இயற்கையை மீண்டும் கட்டியெழுப்ப வடபகுதியில் மக்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.
வடமாகாண சபையின் விவசாய அமைச்சால் இம்மாதம் முழுவதும் மரநடுகை நாட்களாக பிரகடனம் செய்யப்பட்ட நிலையில், மரங்களை ஆர்வமுடன் பெற்று நடுவதில் மக்கள் ஆர்வம் காட்டி வருவதை அவதானிக்க முடிகின்றது.
கிளிநொச்சியின் பாரதிபுரம் பிரதேசத்தில் நேற்று பயன்தரு மரங்கள் மக்களுக்கு விநியோகம் செய்யப்பட்டன.
வடமாகாண சபையின் விவசாய அமைச்சால், சபை உறுப்பினர் பசுபதிப்பிள்ளை ஊடாக கிளிநொச்சி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சி.சிறீதரனின் அனுசரணையோடு இந்த மரங்கள் மக்களிடம் கையளிக்கப்பட்டுள்ளன.
இதில் கரைச்சி பிரதேச சபை உறுப்பினர் குமாரசிங்கம், பா.உறுப்பினர் சி.சிறீதரனின் செயலாளரும் கட்சியின் மாவட்ட கிளையின் உபதலைவருமான பொன்.காந்தன் மற்றும் பாரதிபுரம் கால் ஏக்கர் கிராம அபிவிருத்தி சங்க பிரதிநிதிகள் என பலரும் கலந்து கொண்டனர்.
http://www.tamilwin.com/show-RUmszBScKYjvz.html

No comments:

Post a Comment