Friday, November 14, 2014

ரஷ்யா அனுப்பியுள்ள போர் கப்பல்கள்: அவுஸ்திரேலியாவுக்கு "ஸ்டன்" காட்டும் புட்டின் !


G20 நாடுகளின் உச்சிமாநாடு நடைபெற்று முடிந்துள்ளது. கோலாகலமாக நடந்த இம்மாநாட்டில், பல உலக நாடுகளில் தலைவர்கள் கலந்துகொண்டார்கள். இதில் ரஷ்ய அதிபர் வல்டிமிர் புட்டினும், அவுஸ்திரேலிய அதிபர் டோனி அபொட்ஸும் கலந்துகொண்டார்கள். இவர்கள் இருவரும் ஒருவரை ஒருவர் சந்தித்தவேளை மலேசிய விமானம்(MH 17) உக்கிரேனின் ரஷ்ய ஆதரவுப் படையால் சுட்டு வீழ்த்தப்பட்டதை பற்றி சூடான வாதம் ஒன்றுக்குள் சென்றுவிட்டார்கள். அவுஸ்திரேலிய அதிபர் சுட்டது ரஷ்ய ஆதரவுப் படைகள் தான். எனவே ரஷ்யா மலேசியர்களுக்கு நஷ்ட ஈடு வழங்கவேண்டும் என்று கூறியுள்ளார். இதனை கேட்ட புட்டின் கடும் கோபம் அடைந்ததாக கூறப்படுகிறது. சிரித்துப் பேசிவிட்டு சென்றுவிட்டார் புட்டின்.
ஆனால் மறு நாளே இதுதொடர்பான செய்திகள் வெளியே கசிய ஆரம்பித்து விட்டது. உடனே தமது நாட்டிற்கும் மலேசிய விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டதற்கு எவ்வித தொடர்பும் இல்லை என்று அவர் திட்டவட்டமாக மறுத்து ஒரு அறிக்கையை வெளியிட்டார். பின்னர் ரஷ்யாவின் 4 போர் கப்பலை அவுஸ்திரேலிய கடல் எல்லைக்கு செல்லுமாறும், அங்கே நங்கூரமிட்டு தரித்து நிற்குமாறும் புட்டின் கட்டளையிட்டுள்ளார். இதனால் பதற்றம் ஏற்பட்டுள்ளது. அவுஸ்திரேலியாவுக்கும் பப்புவா- நியூ கின்னி என்னும் நாட்டுக்கும் இடையே உள்ள கடல்கரையில் ரஷ்ய போர்கப்பல்கள் தரித்து நிற்கிறது. அவை அவுஸ்திரேலிய கடல் எல்லையில் இருந்து சில மைல் தொலைவில், ஆனால் சர்வதேச கடல் எல்லையில் நிற்கிறது.
இது அவுஸ்திரேலியாவை அச்சுறுத்தும் வகையில் மேற்கொள்ளப்பட்டுள்ளது என்பதும் மட்டும் நன்றாக தெரிவதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளது குறிப்பிடத்தக்க விடையம் ஆகும்.



No comments:

Post a Comment