Friday, November 14, 2014

எபொல்லா வைரசை அழிக்கும் மந்திரவாதி இவர்தானாம்: இதில் அரசாங்க உத்தியோகம் வேறு !


லைபீரியாவில் கடும்வேகத்தில் பரவிவரும் எபொல்லா வைரஸ் தாக்கத்தை எப்படி கட்டுப்படுத்துவது என்று உலக நாடுகளே, முழி பிதுங்கி நிற்க்கிறது. ஆனால் அன் நாட்டு அரசானது ஒரு மந்திரவாதியை பணம் கொடுத்து களத்தில் இறக்கியுள்ளது. இவர் என்ன சொல்கிறார் என்றால், லைபீரியா நாட்டில் உள்ள பலர் மது அருந்துகிறார்களாம் ! சர்சுக்கு செல்லவில்லையாம் ! இதனால் தான் கடவுள் எபொல்லா வைரசை அனுப்பிவிட்டாராம். தேவ தூதர்களை கொண்டு கடவுளை சாந்தப்படுத்தினால் மட்டுமே இந்த வைரசை அழிக்க முடியும் என்று கூறியுள்ள இவர். தான் தொலைபேசியூடாக தேவதூதர்களோடு பேசவுள்ளதாக கூறியுள்ளார். அட கடவுளே இதனை பல அரச அதிகாரிகள் நம்புகிறார்கள் அப்பா ! அதுதான் பெரிய விடையம்.
ஏழை மக்கள் மற்றும் பாமர மக்கள் இதனை நம்பலாம். ஆனால் படித்த அதிகாரிகளுமா ? எபொல்லா தாக்கிய இடத்திற்கு இந்த மந்திரவாதி இன்னும் செல்லவில்லை. ஆனால் அந்த வைரஸ் தாக்கத்திற்கு அகப்படாமல் இருக்கும் கிராமங்களுக்கு மட்டும் சென்று இவர் பிரசங்கங்களை நடத்தி வருகிறார். இதில் அரசாங்கம் இவருக்கு காசு கொடுக்கிறது. பேய் விரட்டுவது என்று நாம் கேள்விப்பட்டு இருக்கிறோம். இவர் எபொல்லா வைரசை விரட்டப்போகிறாராம். நோய் தாக்கத்திற்கு உள்ளான ஒரு பகுதிக்கு கூட இவர் செல்லவில்லை. இன் நிலையில் இவர் கூறுவதைக் கேட்டு பல மக்கள் இதனை நம்பியும் வருகிறார்கள். இந்த 21ம் நூற்றாண்டில் இப்படியும் சில மனிதர்கள் இருக்கிறார்கள்.
வைரஸ் என்றால் என்ன ? அது என்ன செய்யும் என்பதனை விஞ்ஞானிகள் கஷ்டப்பட்டு கண்டுபிடித்துள்ளார்கள். இன் நோய் தொற்றுவதில் இருந்து எப்படி தப்புவது என்ற உபாதையை கூறினால் கூட பரவாயில்லை. ஆனால் இந்த மந்திரவாதி மக்களுக்கு மேலும் மூட நம்பிக்கையை அல்லவா விதைக்கிறார். 

No comments:

Post a Comment