Friday, November 14, 2014

பாரிஸ் டிஸ்னி லாண்ட் அருகாமையில் புலி: நடமாடும் இதனை பிடிக்க தனிப்படை !

பாரிஸ் புறநகர்ப் பகுதி ஒன்றில் வைத்து சிலர் புலி ஒன்றை பார்த்ததாக பொலிசாரிடம் முறைப்பாடு செய்துள்ளார்கள். இருப்பினும் 2 நாட்கள் கழித்து பாரிசில் உள்ள டிஸ்னி லான் பகுதியில் வைத்து புலியைப் பார்த்த நபர் ஒருவர் உடனே தனது மோபைல் போனில் படம் எடுத்துவிட்டார். பின்னர் அவர் பொலிசாருக்கு அறிவித்ததை அடுத்து அவர்கள், தனிப்படை ஒன்றை அமைத்து தேடுதல் வேட்டையில் இறங்கியுள்ளார்கள். உணவு இன்றி பசியோடு அலைந்து திரியும் இப் புலி யாரையாவது வேட்டையாடலாம் என்ற பயம் தற்போது பலருக்கு தொற்றிக்கொண்டு உள்ளது. புலி காணப்பட்டதாக கூறப்படும் பகுதியில் உள்ள மக்களை மிகவும் கவனமாக இருக்கும்படி பொலிசார் கோரியுள்ளார்கள்.
இதேவேளை இப் புலி எப்படி நகருக்குள் வந்தது என்று தெரியாமல் பிரான்ஸ் பொலிஸ் முழிக்கிறார்கள். மிருகக் காட்சி சாலையில் இருந்து இதுபோன்ற எந்த ஒரு புலியும் தப்பிக்கவும் இல்லை. அப்படி இருக்கையில் இது எவ்வாறு பாரிஸ் நகருக்குள் நுளைந்தது என்று தெரியாது என்று பிரான்ஸ் பொலிசார் தெரிவித்துள்ளார்கள். இதனை நேரில் பார்த்த நபர் தெரிவிக்கையில், அது மிகவும் பெரியது என்றும் அது சிறுத்தை அல்ல என்றும் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment