Friday, November 7, 2014

வண்டி குறையவேண்டும் என்று உடற்பயிற்சிக்காக நடந்த பொலிசார் மழைக்கு ஒதுங்கியவேளை...

வண்டியைக் குறைக்கவேண்டும் மற்றும் உடல் பயிற்சியில் ஈடுபடவேண்டும் என்று, வீதியில் நடைப்பயிற்சியில் ஈடுபட்ட பொலிசார் தற்செயலாக ஒரு சம்பவத்தை பார்த்துள்ளார்கள். சமுர்த்தி திட்டத்தில் வேலைசெய்யும் ஆபிசர் ஒருவர் 14 வயதுச் சிறுவனை பாலியல் துஷ்பிரயோகம் செய்துகொண்டு இருந்து வசமாக மாட்டிக்கொண்டுள்ளார் என அறியப்படுகிறது. சம்பவம் தொடர்பான தகவல்,
பளைப் பகுதியில் தெருவில் உடற்பயிற்சிக்காக நடந்து கொண்டிருந்த பொலிஸ் அதிகாரி, மழை பெய்த போது ஒரு மரத்தின் கீழ் ஒதுங்கியுள்ளனா். அப்போது அந்த மரத்திற்குச் சற்றுத் தொலைவில் மக்கள் நடமாட்டம் இல்லாத பகுதியில் மோட்டார் சைக்கிள் ஒன்று நிற்கவே சந்தேகமடைந்த பொலிசார் அப்பகுதிக்குச் சென்ற போது அங்கு ஒரு கட்டடத்தினுள் சிறுவன் ஒருவனைப் பாலியல் துஸ்பிரயோகத்தில் ஈடுபடுத்திக் கொண்டிருந்த ஒருவரை பொலிசார் கையும் மெய்யுமாகப் பிடித்துள்ளனா் என யாழில் இருந்து கிடைக்கும் செய்திகள் மேலும் தெரிவிக்கின்றன.
குறித்த நபரை விசாரித்த போது அவா் அப்பகுதி சமுா்த்தி உத்தியோகத்தா் எனத் தெரியவந்துள்ளது. இதனையடுத்து குறித்த அலுவலரையும் சிறுவனையும் கைது செய்த பொலிசார் அவா்களை பொலிஸ்நிலையம் கொண்டு சென்று பின்னா் கிளிநொச்சி நீதிமன்றில் ஆயா்படுத்தினா். சிறுவனை மருத்துவ பரிசோதனைக்காக வைத்தியசாலைக்கு அனுப்பியுள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனா்
http://www.athirvu.com/newsdetail/1393.html

No comments:

Post a Comment