Friday, November 7, 2014

கவர்ச்சியான கண்களை காட்டக்கூடாது: மிரட்டும் அரசு!

சவுதியில் கவர்ச்சியான கண்களை கொண்ட பெண்கள், அதை வெளியில் காட்டமால் பர்தா அணிய வேண்டும் என அந்நாட்டின் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சவுதியில் பெரும்பாலான பெண்கள் கவர்ச்சிகரமான கண்களை கொண்டுள்ளதால், அந்த கண்களையும் மறைக்கும் வகையில் பர்தா அணிய வேண்டும் என புதிய சட்டம் ஒன்று வந்துள்ளது.
இதுகுறித்து சவுதி அரசின் நல்லொழுக்க மேம்பாடு மற்றும் தீயவை தடுப்பு குழுவின் செய்தித் தொடர்பாளர் ஷஏக் மோத்லப் அல் நபத் (Sheikh Motlab al Nabet) கூறுகையில், கவர்ந்திழுக்கும் கண்களை மறைக்குமாறு குழு உறுப்பினர்கள் பெண்களிடம் தெரிவிப்பார்கள் என்றும் தற்போது அறிவிக்கப்பட்டுள்ள இந்த சட்டத்தை கையில் எடுத்துக்கொள்ளும் உரிமை எங்களுக்கு உண்டு எனவும் தெரிவித்துள்ளார்.
மேலும் இந்த குழுவின் புதிய சட்டத்திற்கு இஸ்லாமியர்கள் ஆதரவு அளிக்க வேண்டும் என்று இளவரசர் நயிப் (Prince Naif) தெரிவித்துள்ளார்.
ஆனால் இந்த சட்டத்தை கண்டித்து பலர் சமூக வலைதளங்களில் கருத்து தெரிவித்து வருகிறார்கள்.
http://newsonews.com/view.php?24AMec03dOyde2ZnBab2q0Med2Q8E0c3BB5243Alx2226AU3

No comments:

Post a Comment