Friday, November 7, 2014

லண்டனில் மீண்டும் சித்து விளையாட்டு: மாவீரர் தினத்தை வேறு ஒரு நாளில் நடத்த முயற்ச்சி !

சிங்களத்தின் சதிவலை புலம்பெயர் தேசங்களை நோக்கி நாளுக்கு நாள் இறுக்கப்பட்டு வருகிறது. ஏற்கனவே மாவீரர் மாதத்தில் பல குழப்பங்களை ஏற்படுத்த சிங்களம் பல திட்டங்களை தீட்டி செயல்பட்டு வரும் நிலையில், நவம்பர் 27 ல் நடை பெறும் மாவீரர் தினத்தை நவம்பர் 30ல் நடத்த ஒரு குழு லண்டனில் திட்டம் தீட்டி, நோட்டீஸ் அடித்து வெளியிட ஆரம்பித்துள்ளார்கள். தேசிய தலைவரால் அறிவிக்கப்பட்டு, பல ஆண்டுகளாக நடைபெற்று வரும் இந்த மாவீரர் தினம் எந்த ஒரு காரணத்திற்காகவும் பிறிதொரு நாளில் நடத்தப்படுவதே இல்லை. அதுபோல குளிரோ மழையோ, இல்லை புயலாக இருந்தாலும் கூட, அது என்ன நாளாக இருந்தாலும், புலம்பெயர் தேசங்களில் நவம்பர் 27 தான் அது நடைபெற்று வருகிறது.
ஆனால் சிங்களத்தின் நிகழ்சி நிரலில் இயங்கி வரும் சில விஷமிகள், நவம்பர் மாதம் 30ம் திகதி மாவீரர் தினம் என்று நோட்டீஸ் அடித்து வெளியிட்டுள்ளார்கள். மாவீரர் தினத்தை உடைக்கவும், அதனை பலமிழக்கச் செய்யவுமே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என அறியப்படுகிறது. மாவீரர்களையும் லட்சியத்துக்காக போராடி மரணித்த எமது செல்வங்களையும் இது, அவமானப்படுத்தும் நோக்கில் அமைந்துள்ளது மிகவும் கண்டிக்கத்தக்க விடையம் ஆகும். பிரித்தானியாவில் உள்ள சில தமிழ் அமைப்புகளில் உள்ள முக்கியஸ்தர்கள், நடைபெறும் மாவீரர் தினத்தில் தாம் மேடையேறி உரையாற்றவேண்டும் எனவும், அப்படி மேடையில் உரையாற்ற வாய்ப்பு தராவிட்டால் மாவீரர் தினத்தை உடைக்கும், இதுபோன்ற நபர்களோடுதாமும் கைகோர்ப்போம் என்று மிரட்டியும் வருகிறார்கள்.
மேடையில் ஏறிப் பேசுவது,TV வந்து முகம் காட்டுவது, என்பது தான் இந்த முகியஸ்தர்களின் ஒரே நோக்கமாக உள்ளது. முகம் காட்டினால் மட்டும் போதும். அதற்கு ஏன் இந்தப் புணிதமான நாளை பாவிக்கவேண்டும். மக்கள் பெரும் அளவில் சென்று தமது செல்வங்களுக்கு அஞ்சலி செய்து வரும் இந்த நிகழ்வை தயவுசெய்து எவரும் அரசியல் சாக்கடையாக்கவேண்டாம். வேறு ஒரு நாளில் மாவீரர் தினத்தை வைக்க முற்படும், சிங்கள சக்திகளின் நோட்டீசில் உள்ள தொலைபேசி இலக்கம் இதுதான். :07404 197670 . பிரித்தானிய மக்கள் இதற்கு தகுந்த பதிலடி கொடுப்பார்கள்.
http://www.athirvu.com/newsdetail/1396.html

No comments:

Post a Comment