மகிந்த ராஜபக்ஷ தனது ஜாதகம் சிறப்பாக இருப்பதால் அடுத்த தேர்தலில் வெற்றி பெற்று விடலாம் என்று எண்ணிக்கொண்டிருப்பதாகவும் தேர்தலில் மகிந்தவின் ஜாதகத்தை விட மக்களின் ஜாதகம் பலமானது எனவும் ஜாதிக ஹெல உறுமயவின் நாடாளுமன்ற உறுப்பினர் அத்துரலியே ரத்ன தேரர் தெரிவித்துள்ளார்.
மகிந்த ராஜபக்ஷவின் ஜாதகத்தை பலப்படுத்தும் அளவுக்கு நாட்டு மக்கள் துரதிஷ்டசாலிகள் இல்லை.
தற்போது எமக்கு பாரிய பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. கட்சிகளின் நிலைப்பாடுகளுக்கு வரையறைப்படாது, அதில் இருந்து தூரச் சென்று அந்த சிறைகளில் இருந்து விலகி, மக்களுக்காக முன்னோக்கி செல்லும் யுகம் உருவாகியுள்ளது.
தேசிய பொருளாதாரத்தை வளர்க்க உருவாக்கப்பட்ட மகிந்த சிந்தனை இன்று அதனை செய்துள்ளதா என்பதை நாம் எமது மார்பில் அடித்து கொண்டு கேட்கவேண்டியுள்ளது.
மகிந்த சிந்தனையில் மதுவுக்கு முற்றிப்புள்ளி என்று குறிப்பிட்டுள்ளது எனினும் அரசாங்கத்தில் உள்ள சில அமைச்சர்களே நாட்டிற்கு எத்தனோலை இறக்குமதி, மதுபானசாலைகளை வைத்து கொண்டு மதுபானத்தை விற்பனை செய்து வருகின்றனர்.
மகிந்தவின் அரசாங்கம் கசினோகாரர்களை மாத்திரமே உருவாக்கியுள்ளது. இது கசினோ அரசாங்கம். இன்று சந்தேஷ உலகம் என்ற கலாச்சாரத்தை ஏற்படுத்தியுள்ளனர். நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி ஆட்சிமுறையே இதற்கு காரணம்.
எமக்கு இப்படியான ஆட்சியாளர்கள் தேவையில்லை. மக்களின் தேவைகள் மாத்திரமே எமக்கு முக்கியம். மக்களின் தேவைகளுக்காக சகலவற்றையும் அர்ப்பணிக்க வேண்டும். நான் அனைத்தையும் அர்ப்பணிக்க தயாராக இருக்கின்றேன் எனவும் அத்துரலியே ரத்ன தேரர் குறிப்பிட்டுள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmszBTbKXfp0.html
No comments:
Post a Comment