மோல்டோவியா நாட்டை சேர்ந்த பெண் நீதிபதியின் நீச்சலுடை புகைப்படம் வெளியானது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
மோல்டோவியா நாட்டின் தலைநகர் சிசினவ் (Chisinau) நகரை சேர்ந்த மரியா கோசமா(Maria Cozma Age-27) சமீபத்தில் பிரதான குற்றவியல் நீதிமன்றமான சென்ரு (Senru) நீதிமன்ற நீதிபதியாக நியமிக்கபட்டார்.
இவர் தனது விடுமுறை நாட்களை கொண்டாட சென்றபோது எடுத்துக்கொண்ட நீச்சல் உடை புகைப்படங்கள், தற்போது டுவிட்டரில் வெளியாகி மக்களினால் பெரும் விமர்சனத்திற்குள்ளாகியுள்ளது.
இந்த புகைப்படத்தை பார்த்த பல்வேறு அமைப்புகள் அந்த பெண் நீதிபதிக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து செய்தி தொடர்பாளர் கூறுகையில், நாம் நமது தொழிலில் மரியாதைக்குரியதாகவும், தீவிரமாகவும் இருக்க வேண்டும். இது குற்றவாளிகளுக்கு மகிழ்ச்சியை தூண்டும்.
துரதிர்ஷ்டவசமாக அவர் நமது குடும்பத்தை சேர்ந்தவராக உள்ளார். அதற்கு நாம் என்ன செய்யமுடியும். ஆனால் பெண் நீதிபதிகள் இது போன்ற உதாரணங்களை பின்பற்ற வேண்டாம் என எச்சரிக்கை விடுக்கிறேன் என கூறியுள்ளார்.
மேலும் இந்த புகைப்படம் பெண்கள் அமைப்புகளை கோபத்தில் ஆழ்த்தியுள்ளதாக கூறப்படுகிறது.
http://newsonews.com/view.php?24AMec03dOyde2ZnBab2q0Med2Q8E0c3BB5243Aln2236AI3
|
No comments:
Post a Comment