Tuesday, November 11, 2014

முதலுதவி சேவையை வழங்கும் ஆளில்லா அம்பியூலன்ஸ் விமானம் நெதர்லாந்தில் தயாரிப்பு !

திடீர் விபத்து நேரங்களில் காயமடைவர்களுக்கு மற்றும் மாரடைப்பு நோயாளர்களுக்கு முதலுதவி வழங்கும் வசதிகளைக் கொண்ட ஆளில்லா அம்பியூலன்ஸ் விமானமொன்றை நெதர்லாந்து பல்கலைக்கழக மாணவர்கள் உருவாக்கியுள்ளனர். இந்த ஆளில்லா அம்பியூலன்ஸ் விமானத்தில் சிறிதளவான முதலுதவிப் பொருட்களை எடுத்துச் செல்ல முடியும். இருந்த போதிலும் சில நிமிடங்களில் பாதிக்கப்பட்டவருக்கு முதலுதவி அளிக்க முடியும் என்ற சிறப்பு அம்சத்தை இந்த ஆளில்லா அம்பியூலன்ஸ் விமானம் கொண்டிருக்கின்றது.
மேலும் இந்த ஆளில்லா விமானத்தை முதலுதவி அளிக்கும் உதவி தாதியரின் கையடக்கத் தொலைபேசி ஊடாக கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்க முடியும் என இதனைத் தயாரித்துள்ள ALEC MOMONT என்ற மாணவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்த ஆளில்லா விமானத்தின் பட்டறியானது மிகவும் சிறிய சேமிப்பகத்தை உடையதாக உருவாக்கப்பட்டிருந்த போதிலும் விமானம் அதிக வேகத்துடன் பயணிக்கும் திறனை உடையது என அவர் கூறியுள்ளார். வர்த்தக நோக்கத்துடன் உருவாக்கப்பட்டுள்ள இந்த ஆளில்லா விமானத்தின் விற்பனையின் பின்னரே ஏனைய விடயங்கள் குறித்து தீர்மானிக்கப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.
எவ்வாறாயினும் இந்த ஆளில்லா அம்பியூலன்ஸ் விமானம் தற்போது பரீட்சார்த்த நடவடிக்கையில் ஈடுபடுத்தப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


No comments:

Post a Comment