Tuesday, November 11, 2014

30 அடி அனகொண்டா பாம்பு மனிதரை விழுங்கிய காட்சி: TV ஒளிபரப்ப கூடாது என்று வாக்குவாதம் !

காட்டில் நடக்கும் பல திடுக்கிடும் சம்பவங்களை படமாக்கி, டிஸ்கவரி சேனலுக்கு கொடுக்கும் நபர் தான் போல் றொசொலி. இவர் பல மிருகங்களையும் அவை செய்யும் பயங்கர செயல்களை மிகவும் சாதூரியமாக படம் பிடிக்க வல்லவர். இவர் சில வாரங்களுக்கு முன்னர் உலகில் உள்ள படு பயங்கரமான காடு ஒன்றுக்குச் சென்றுள்ளார். இக்காட்டில் 30 அடி நீளமான அனகொண்டா என்னும் ராட்சத பாம்புகள் வசித்துவருகிறது. இவை அனைத்தையும் தெரிந்தே அவர் அந்த காட்டிற்குச் சென்றுள்ளார். பல நாட்களாக அனகொண்டாவை தேடி அலைந்த போல் றொசொலியோவுக்கு அவர் தேடிய நீளமான பாம்பு சிக்கியது.
அதனை படம் எடுப்பார் என்று அனைவரும் நினைத்தார்கள். அதுதான் இல்லை. மாறாக தலைக்கு ஒரு வகசத்தை அணிந்துகொண்டு, உடலில் ஒரு கவச ஆடையை போட்டுக்கொண்டு அவர் அனகொண்டாவுக்கு உணவாக மாறியுள்ளார். 30 அடி நீளமான அந்த பாம்பு அவரை மெல்ல மெல்ல விழுங்க ஆரம்பித்துள்ளது. முற்று முழுதாக உள்ளே செல்லாமல், ஒரு கட்டத்தில் அவர் உடலில் உள்ள கயிற்றை பாவித்து அவரது நண்பர்கள் அவரை வெளியே இழுத்து எடுத்துவிட்டார்கள். இருப்பினும் ஒருவேளை அது நடைபெறாமல் போனால், அவர் முற்று முழுதாக பாம்பின் வயிற்றுக்குள் சென்று இருப்பார். பின்னர் கத்தை கொண்டு கிழித்து தான் வெளியே வந்திருக்க நேர்ந்து இருக்கும்.
இதனை மிகவும் விறுவிறுப்பாக படமாக்கியும் உள்ளார். டிசம்பர் மாதம் இந்தக் காட்சிகள் டிஸ்கவரி சேனலில் ஒளிபரப்ப இருந்தது. ஆனால் இதற்கு தற்போது எதிர்ப்பு கிளம்பியுள்ளது. மிருகங்களை சித்திரவதை செய்யும் காட்சி இது என்று ஒரு சாரார் தெரிவித்து வருகிறார்கள். அவர்கள் 22,000 கையொப்பங்களை பெற்று, இன் நிகழ்சியை ஒளிபரப்ப கூடாது என்று TV சேனலுக்கு அழுத்தம் கொடுக்க ஆரம்பித்துள்ளார்கள். ஆனால் இதில் போல் றொசொலிக்கோ இல்லை, அந்த அணகொண்டா பாம்பிற்கோ எந்த ஒரு பாதிப்பும் நடக்கவில்லை என்று, TV சேனல் தெரிவித்துள்ளது. ஒரு அணகொண்டா பாம்பு மனிதரை விழுங்கினால் எப்படி இருக்கும் என்று, இதுவரை யாரும் நேரில் அல்லது வீடியோவில் பார்த்தது இல்லை. இதுவே முதல் தடவை ஆகும். ஆனால் டிஸ்கவரி TV சேனல் இதனை ஒளிபரப்பாது விட்டால் என்ன ? எத்தனையோ சேனல் போட்டி போட்டு இதனை வாங்கி ஒளிபரப்பும் என்று கூறப்படுகிறது.
ஏன் எனில் இந்த படம் அவ்வளவு பிரபல்யம் ஆகிவிட்டது. சும்மா ஒளிபரப்பாக இருந்த இந்தப் படத்தை ஒளிபரப்ப கூடாது என்று சிலர் கோஷம் எழுப்பியே படத்தை பிரபல்யம் ஆக்கிவிட்டார்கள் போங்கள். இதுதான் கத்திக்கும் நடந்தது.


No comments:

Post a Comment