எதிர்க்கட்சிகளின் சார்பில் முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா குமாரதுங்க மற்றும் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமைத்துச் சபையின் தலைவர் கரு ஜயசூரிய ஆகிய இரண்டு போரையும் தேர்தலில் நிறுத்தும் திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக தெரியவருகிறது.
எதிர்வரும் 19 ஆம் திகதி ஜனாதிபதித் தேர்தலை நடத்தும் திகதி அறிவிக்கப்பட்ட பின்னர் இது தொடர்பான தகவல்கள் வெளியிடப்படவுள்ளது.
சந்திரிக்கா குமாரதுங்கவின் வேட்புமனுவை உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பின் அடிப்படையில் தேர்தல் ஆணையாளர் நிராகரித்தால் அதற்கு மாற்று ஏற்பாடாகவே இந்த இருவரும் வேட்புமனுக்களை தாக்கல் செய்ய உள்ளதாக பேசப்படுகிறது.
மகிந்த ராஜபக்ஷவுக்கு மூன்றாவது முறையாக போட்டியிட முடியும் என்ற உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பில் ஓய்வுபெற்ற ஜனாதிபதிகள் தேர்தலில் போட்டியிட முடியாது என்ற விடயம் இருப்பதன் காரணமாகவே அரசாங்கம் உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பை வெளியிடாமல் இருந்த வருகிறது.
உயர்நீதிமன்றத்தின் தீர்மானத்தை சபை முதல்வராக அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா நாடாளுமன்றத்தில் அறிவித்த போதிலும் அதனை சபையில் சமர்பிக்கவில்லை.
இதனால், உயர்நீதிமன்றத்தின் தீர்மானத்தை நாடாளுமன்றத்தில் சமர்பிக்குமாறு எதிர்க்கட்சிகள் கோரி வருகின்றன போதிலும் அரசாங்கம் வேண்டும் என்றே அதனை தவிர்த்து வருகிறது.
சந்திரிக்கா குமாரதுங்கவின் வேட்புமனுவை தேர்தல் ஆணையாளர் நிராகரித்தால், எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளராக கரு ஜயசூரிய போட்டியிடுவார்.
தேர்தல் ஆணையாளர் முன்னாள் ஜனாதிபதி வேட்புமனுவை நிராகரிக்காது ஏற்றுக்கொண்டால், கரு ஜயசூரிய வேட்புமனுவை திரும்ப பெற்றுக்கொள்வார் எனவும் சந்திரிக்கா எதிர்க்கட்சியின் பொது வேட்பாளராக போட்டியிடுவார் எனவும் கூறப்படுகிறது.
http://www.tamilwin.com/show-RUmszBSbKYjq7.html
No comments:
Post a Comment