கடந்த சில தினங்களுக்கு முதல் யூ-ரியூபில் வெளியான இந்த வீடியோவைப் பார்த்து பலர் அதிர்ந்துபோனார்கள். இந்தியாவில் உள்ள மிகவும் பின் தங்கிய கிராமம் ஒன்றில் வசித்துவரும் பாட்டி ஒருவர், சிறிய இரும்பு கம்பி ஒன்றை வைத்துள்ளார். அவரிடம் 25 ரூபா கொடுத்தால் போதும் கண்களை அந்தக் கம்பி கொண்டு சுத்தம்செய்கிறார் என்பது தான் அந்த வீடியோவில் உள்ளது. எமது கண்ணுக்கு மேலே உள்ள, மடலை அப்படியே கொஞ்சம் தூக்கிப் பிடித்து, மடலுக்கு உள்ளே கம்பியை விட்டு சுத்தம் செய்து, பின்னர் அந்த அழுக்கை எடுத்து சுத்தம் செய்ய வந்தவர் கைகளிலேயே கொடுக்கிறார். அட இந்த வீடியோவைப் பார்த்து பலர் ஆடிப்போனார்கள். இந்த வீடியோ வெளிநாட்டுக்கு வரவும் ஆரம்பித்து விட்டது. ஆனால் வெள்ளைக்காரர்கள் சும்மா இருப்பார்களா ?
இது தொடர்பான சூடான விவாதம், ஆங்கில ஊடகம் ஒன்றில் பரவ ஆரம்பித்தது. அதாவது ஆங்கிலேயர் என்ன சொல்கிறார்கள் என்றால், பாட்டை கண்ணை சுத்தம்செய்துவிட்டு எடுத்துக்கொடுக்கும் கழிவு இருக்கிறதே அது மிகவும் அபரிவிதமாக இருக்கிறதாம். இவ்வளவு பெரிய கழிவு கண் மடலுக்குள் இருந்திருந்தால், அது நிச்சயம் கண்ணை உறுத்தி இருக்கும். ஒரு சிறிய முடி கண்ணுக்குள் விழுந்துவிட்டாலே, கண் உடனே உறுத்துகிறது. வலி எடுக்க ஆரம்பித்துவிடுகிறது. இப்படி இருக்கும்போது எப்படி இவ்வளவு பெரிய கழிவை பாட்டி வெளியே எடுக்கிறார் ? அம்மனிதருக்கு இவ்வளவு கழிவு கண்ணில் இருந்தால் எப்பவோ உறுத்த ஆரம்பித்து இருக்கும் அல்லவா ?பாட்டி சென்ன கதை ... இல்லை இல்லை பாட்டி செய்து காட்டியது மாயாஜால வித்தை தான். வேறு ஒன்றும் இல்லை.
கண்ணில் கம்பியை விட்டு ஆட்டுவது நிஜம் தான். ஆனால் அவர் கழிவு என்று சொல்லி, கஸ்டம் கைகளில் கொடுப்பது வேறு எங்கோ மறைத்து வைத்திருந்த கழிவு தான் என்கிறார்கள் ஆங்கிலேயர்கள். ஆனால் நம்ம ஊரு ஆட்கள் எல்லாம் 25 ரூபா கொடுத்து இதுபோன கண்ணை கிளீன் பண்ண கியூவில் நிற்கிறார்கள். பாட்டி அம்பானி ரேஞ்சுக்கு போவது நிச்சயம் என்று மட்டும் தெரிகிறது !
அதிர்வுக்காக,
வல்லிபுரத்தான்.
http://www.athirvu.com/newsdetail/1456.html
No comments:
Post a Comment