பிரான்சின் அழகுமிகு நகரான பாரிஸ், இளைஞர்கள் வாழ்வதற்கு ஏற்ற நகரங்களின் பட்டியலில் முதலிடம் பிடித்துள்ளது.
டொரண்டோவைச் சேர்ந்த அமைப்பு ஒன்று நடத்திய ஆய்வில், உலகளவில் இளைஞர்கள் வாழ்வதற்கு மிகச்சிறந்த நகரங்களின் பட்டியலை வெளியிட்டுள்ளது.
இதில் பாரிஸ் முதலிடம் பிடித்துள்ளது, அடுத்ததாக பெர்லின் (ஜேர்மனி), ரோம் (இத்தாலி) மற்றும் டொரண்டோ (கனடா) நகரங்கள் உள்ளன.
வீட்டு வாடகை, குறைந்தபட்ச ஊதியம் மற்றும் இளைஞர்களுக்கான வேலைவாய்ப்பு போன்றவற்றை அடிப்படையாக கொண்டு இந்த பட்டியல் தயாராகியுள்ளது.
மேலும் இந்த ஆய்வின் முடிவில், இளைஞர்களை பொறுத்தவரை செலவுகள் முக்கிய இடம்பிடிப்பதாகவும், அந்த வகையில் இளைஞர்கள் வாழ்வதற்கு மிகச்சிறந்த நகரமாக பாரிஸ் உள்ளது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
|
No comments:
Post a Comment