ஆப்ரிக்க நாடான நைஜீரியாவில் தீவிரவாதிகள் நடத்திய மனித வெடிகுண்டு தாக்குதலில் 47 பள்ளி மாணவர்கள் பலியாகியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
நைஜீரியாவின் யோபே மாநிலத்தில் பொட்டிஷ்கும் என்ற நகரில் உள்ள அரசு அறிவியல் பள்ளிக்கூடத்தில் நுழைந்த தற்கொலை படை தீவிரவாதி ஒருவன் குண்டை வெடிக்க செய்ததில் பள்ளிக்கூட கட்டிடங்கள் இடிந்து தரைமட்டமாகியுள்ளது.
இந்த தாக்குதலில் 47 மாணவர்கள் பலியாகியுள்ளதாகவும், 79 மாணவர்கள் படுகாயம் அடைந்துள்ளதாகவும், அதில் 10க்கும் மேற்பட்ட மாணவர்களின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாகவும் தெரியவந்துள்ளது.
இந்த தாக்குதலுக்கு இதுவரை எந்த இயக்கமும் பொறுப்பு ஏற்காத நிலையில், பாதுகாப்பு படையினர் போகோஹாரம் தீவிரவாதிகள் மீது தான் சந்தேகம் அடைந்து உள்ளதாக தெரிகிறது.
இந்நிலையில், யோபே மாநிலத்தில் நடந்த தாக்குதலில் பலியான மாணவர்களின் குடும்பத்தினருக்கு நைஜீரிய ஜனாதிபதி குட்லக் ஜோனதன் தனது இரங்கலை தெரிவித்துள்ளார்.
மேலும், கடந்த அக்டோபர் மாதம் 17ம் திகதி முதல் போகோஹாரம் தீவரவாதிகளுடன் போர் நிறுத்த ஒப்பந்தம் குறித்து அரசு பேசி வந்தாலும், தீவிரவாத குழுக்களின் தலைவர் அபுபக்கர் ஷெய்கு இதற்கு ஒத்துக்கொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
http://newsonews.com/view.php?23BB2cgMA42C8202lA2dAOT22E02e2A62bBnB3
|
No comments:
Post a Comment