ஆப்கானிஸ்தானில் 8 வயது சிறுமி ஒருவர் ஐஸ்கிரீம் விற்று தனது குடும்பத்தில் உள்ள 9 நபர்களை காப்பாற்றி வருகிறார்.
ஆப்கானிஸ்தான் ஹெராட் நகரை சேர்ந்த பாத்திமா எனும் 8 வயது சிறுமி காலை 7 மணி முதல் மாலை 4 மணி வரை பள்ளிகள் மற்றும் பிற இடங்களில் ஐஸ்கிரீம் விற்று வருகிறார்.
வறுமை காரணமாக பள்ளிக்கு செல்லாத பாத்திமா தனது தந்தை, தாய், தந்தையின் மற்றொரு மனைவி மற்றும் 5 சகோதரிகளுக்காக இவ்வாறு கடுமையாக உழைத்து வருகிறார்.
கடந்த நான்கு வருடங்களுக்கு முன், பக்கவாதத்தால் பாதிக்கப்பட்ட பாத்திமாவின் தந்தை அதற்குமுன் தினக்கூலியாக வேலை செய்துள்ளார்.
இப்போது அவருக்கு உடல்நலம் குன்றியதால் குடும்பத்தை காப்பாற்ற வேண்டிய கட்டாயம் பாத்திமாவிற்கு ஏற்பட்டுள்ளது.
சிறிய தள்ளுவண்டியில் வைத்து ஐஸ்கிரீம் விற்றுவரும் பாத்திமா இதுகுறித்து கூறுகையில், எனது ஒரே பெரிய கனவு என்னிடம் பணம் இருக்க வேண்டும் என்பது தான்.
அப்போதுதான் நான் வேலைக்கு செல்லாமல் பிற சிறுமிகள் போல பள்ளிக்கு செல்ல முடியும்.
நான் பள்ளிவாசலில் ஐஸ்கிரீம் விற்கும் போது மற்ற சிறுமிகள் சிரித்துக்கொண்டே மகிழ்ச்சியாக பள்ளிக்கு செல்வதை பார்த்தால் எனக்கும் அதே போல பள்ளிக்கு செல்ல வேண்டுமென ஆசையாக இருக்கும்.
மேலும், எனக்கு ஏழையாக இருக்க பிடிக்கவேயில்லை என்றும் எனக்கு ஐஸ்கிரீம் பிடிக்கும் என்றாலும், என்னால் அதை வாங்கி கூட சாப்பிட முடியாது எனவும் தெரிவித்துள்ளார்.
|
No comments:
Post a Comment