Monday, November 17, 2014

பிளக்வுட்டில் நரமாமிசத்திற்காக படுகொலை செய்யப்பட்ட இளம் பெண்னின் விபரங்கள் !


வேல்ஸ் பிளக்வுட் பகுதியில் நரமாமிசத்திற்காக படுகொலை செய்யப்பட்ட இளம் பெண் தொடர்பான செய்தியை அதிர்வு இணையம் ஏற்கனவே வெளியிட்டு இருந்தது. தற்போது இப்பெண் யார் அவருக்கும் இந்த நரமாமிசம் உண்ணும் நபருக்கும் எப்படி பழக்கம் ஏற்பட்டது என்பதுபோன்ற விபரங்கள் வெளியிடப்பட்டுள்ளது. பிளக்வுட், ஆர்கோய்ட் பகுதியில் அமைந்துள்ள வீடுகளற்றௌருக்கு தங்குமிட வசதி செய்துகொடுக்கப்படும் விடுதியில் நேற்றைய தினம் நரமாமிசத்திற்காக படுகொலை செய்யப்பட்ட பெண் பிளக்வுட் பகுதியைச் சேர்ந்த 22 வயதுடைய கிறிஸ் மாரி யெம் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
இவரை நரமாமிசத்திற்காக படுகொலை செய்த நபரான 34 வயதுடைய மெத்திவ் வில்லியம்ஸ் நேற்றைய தினம் பொலிசாரின் மின்சார துப்பாக்கியினால் நடத்தப்பட்ட மின் அழுத்தத் தாக்குதலுக்கு உள்ளாகி உயிரிழந்தமை குறிப்பிடத்தக்கது. இந்த நபர் குற்றமொன்றுக்காக சிறையில் அடைக்கப்பட்டிருந்த நிலையில் ஒருசில நாட்களுக்கு முன்னரே விடுதலையாகியிருந்ததாகவும் பொலிசார் தெரிவித்துள்ளனர். வீடுகள் இல்லாதவர்களுக்காகான தற்காலிக தங்குமிடமாக திகழும் குறித்த விடுதியில் நேற்றைய தினம் மெத்திவ் வில்லியம் என்ற நபர் நரமாமிசத்திற்காக குறித்த இளம் பெண்னை படுகொலை செய்துள்ள விடயம் அங்கு சென்ற பொலிசாருக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது.
குக்கிராமமான தங்களது கிராமத்தில் இடம்பெற்ற கொடூரமான இந்த சம்பவம் தொடர்பில் ஒட்டுமொத்த கிராம மக்களும் அதிர்ச்சியில் இருப்பதாக தெரிவித்துள்ள கிராமத்தவர்கள், நரமாமிசத்திற்காக ஒருவரை படுகொலை செய்யும் கொடூரமான நிகழ்வுகள் தொடர்பில் செய்திகள் பரவுதை விரும்பவில்லை என்றும் விசனம் தெரிவித்துள்ளனர். இதேவேளை பொலிசார் தொடர்ந்தும் இந்த சம்பவம் தொடர்பில் புலன்விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

No comments:

Post a Comment