அமெரிக்காவை கொலம்பஸ் கண்டுபிடித்ததாக வரலாற்று ஆதாரங்கள் தெரிவிக்கின்றன. ஆனால் அமெரிக்காவை கண்டுபிடித்தது அவர் அல்ல. அவருக்கு முன்னதாக முஸ்லிம்கள்தான் கண்டுபிடித்ததாக தகவல் வெளியாகி உள்ளது.
இந்த தகவலை துருக்கி அதிபர் ரீசெப் தயிப் எர்டோகன் தெரிவித்துள்ளார். துருக்கியின் இஸ்தான்புல் நகரில் லத்தீன் அமெரிக்கா நாடுகளைச் சேர்ந்த முஸ்லிம் தலைவர்கள் மாநாடு நடந்தது.
இந்த தகவலை துருக்கி அதிபர் ரீசெப் தயிப் எர்டோகன் தெரிவித்துள்ளார். துருக்கியின் இஸ்தான்புல் நகரில் லத்தீன் அமெரிக்கா நாடுகளைச் சேர்ந்த முஸ்லிம் தலைவர்கள் மாநாடு நடந்தது.
அதில் துருக்கி அதிபர் எர்டோகன் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது:–
அமெரிக்காவை கண்டுபிடித்தது கிறிஸ்டோபர் கொலம்பஸ் என்று கூறுகின்றனர். உண்மை அதுவல்ல. அமெரிக்காவை 1178–ம் ஆண்டில் முஸ்லிம்கள் கண்டுபிடித்துள்ளனர்.
அதாவது கொலம்பஸ் அமெரிக்காவில் காலடி பதிக்கும் முன்பே அந்நாட்டை முஸ்லிம்கள் கண்டுபிடித்துள்ளனர். அதாவது கொலம்பஸ் அங்கு செல்வதற்கு 300 ஆண்டுகளுக்கு முன்னதாக 12–ம் நூற்றாண்டிலேயே கண்டுபிடித்து இருக்கின்றனர்.
அமெரிக்கா குறித்து கொலம்பஸ் வெளியிட்டுள்ள செய்தியில், கியூபன் கடற்கரையில் உள்ள மலையில் ஒரு மசூதி இருந்ததாக தெரிவித்துள்ளார். மேலும் 12–ம் நூற்றாண்டிலேயே லத்தீன் அமெரிக்காவுக்கும், இஸ்லாமுக்கும் இடையே தொடர்பு இருந்துள்ளது என்றார்.
No comments:
Post a Comment