Monday, November 17, 2014

இரவுநேர கழியாட்ட விடுதி பாத்ரூமில் வைத்து என்னை கற்பழித்தார்: கதை வேறு மாதிரி திரும்பியதால்..


இத்தாலிக்கு சென்று உல்லாசமாக இருந்த பிரித்தானிய பெண் சிக்கலில் மாட்டியுள்ளார். இவர் விடுமுறைக்காக இத்தாலி சென்றவேளை அங்கே உள்ள இரவுநேர கழியாட்ட விடுதி ஒன்றுக்குச் சென்று குடித்துவிட்டு நடனமாடியுள்ளார். அங்கே இருந்த அலெக்ஸான்டர் அவிரோ என்னும் 23 வயது இளைஞர் தன்னை கற்பழித்துவிட்டதாக அவர் இத்தாலியப் பொலிசாரிடம் முறைப்பாடு செய்துள்ளார். ஆனால் தான் பிரித்தானியப் பெண்ணை கற்பழிக்கவில்லை என்றும், போதையில் இருந்த அவர் தன்னை கழிவறைக்கு அழைத்துச் சென்று அங்கே வைத்து தன்னை பலவந்தமாக கிஸ் அடித்தார் என்று அந்த இளைஞர் கூறியுள்ளார். இத்தாலியப் பொலிசார் இரவு நேர கழியாட்ட விடுதியிலுள்ள CCTV கமராவைப் பார்த்துள்ளார்கள்.
என்ன அதிர்சி ! இளைஞர் சொன்னதே உண்மை. குறித்த பெண்ணே இளைஞரை வலுக்கட்டாயமாக இழுத்துச் சென்று, கிஸ் அடித்துள்ளார். ஆனால் தன்னை அந்த இளைஞர் கெடுத்துவிட்டதாக பொலிசிடம் புகார் கூறியுள்ளார். இத்தாலி நாட்டுச் சட்டப்படி, பொலிசாரிடம் பொய் புகார் கூறுபவர்களுக்கு கடுமையான தண்டனை உள்ளது. எனவே அதனடிப்படையில், பிரித்தானியப் பெண்ணுக்கு 12 வருட சிறைத் தண்டனை கிடைக்கலாம் என்று பொலிசார் தெரிவித்துள்ளார்கள். சரீனா போல்ஸ் என்னும் இந்த 21 வயது பிரித்தானியப் பெண், தற்போது பிரிட்டன் வந்துவிட்டார். இருப்பினும் இத்தாலியில் வழக்கு தொடர்ந்து நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது.
ஒருவேளை வழக்கு அவருக்கு பாதகமாக முடிவடைந்தால், சரீனாவை பிரித்தானியா இத்தாலிக்கு நாடுகடத்த நேரிடும் என்றும் கூறப்படுகிறது. சில பெண்கள் மதுபோதையில் இருக்கும்போது இவ்வாறு ஆண்களுடன் நடந்துகொள்வதும், பின்னர் போதை தெளிந்தபின்னர் அவர் தன்னை கற்பழித்துவிட்டார் என்று கூறுவதும் வழக்கமானதொன்றாகப் போய்விட்டது.

No comments:

Post a Comment