திருமணம் செய்ய மறுத்த பட்டதாரி பெண்ணை கத்தியால் குத்தி கொலை செய்த காதலனை போலீசார் தேடி வருகின்றனர். பொன்னாச்சி அருகே இந்த சம்பவம் நடந்துள்ளது.பொள்ளாச்சி அருகேயுள்ள சூளேஸ்வரன்பட்டி பாரிவள்ளல் வீதியை சேர்ந்தவர் சந்திரன். தனியார் கம்பெனி ஊழியர். இவரது மகள் சுப்ரியா (23), பிகாம் பட்டதாரி. சுப்ரியாவும் ஜோதி நகரை சேர்ந்த தனியார் மசாலா கம்பெனி ஏஜண்ட் தங்கதுரை (27) என்பவரும் கடந்த சில ஆண்டுகளாக காதலித்து வந்தனர். இது சுப்ரியாவின் பெற்றோருக்கு தெரியவந்தது. இவர்களும் திருமணம் செய்து வைக்க எண்ணியதாக தெரிகிறது. இதனால், தங்கதுரையை பற்றி விசாரித்துள்ளனர்.அவரது நடவடிக்கை பிடிக்காததால் திருமணத்துக்கு மறுத்து விட்டனர்.
இதனால், சுப்ரியாவும் தங்கதுரையிடம் பேசுவதை நிறுத்திக் கொண்டார். ஆனால், அவரை அடிக்கடி தங்கத்துரை தனியாக சந்தித்து, ‘என்னை எதற்காக வெறுக்கிறாய். நான் உன்னை உண்மையாக காதலிக்கிறேன்‘ என்று கேட்டு தொந்தரவு செய்துள்ளார். அவரது தொல்லை தாங்காமல் அனைத்து மகளிர் போலீசில் சுப்ரியா குடும்பத்தினர் புகார் கொடுத்தனர். அப்போது, தங்கதுரையை போலீசார் எச்சரித்து அனுப்பினர். இந்நிலையில், நேற்று மதியம் சுப்ரியாவின் வீட்டுக்கு தங்கதுரை சென்றார். அந்தநேரம், அவரது தாயார், உறவினர்கள் வீட்டில் இருந்தனர். அப்போது, தனியாக பேசவேண்டும் என்று கூறி சுப்ரியாவை அழைத்துள்ளார். இதன்பிறகு, வீட்டின் ஒரு ஓரத்தில் இருவரும் தனியாக பேசி உள்ளனர். அப்போது, ‘என்னை எதற்காக ஒதுக்குகிறாய், என்ன காரணம் என்று தெரிய வேண்டும். உன்னை திருமணம் செய்ய ஆசைப்படுகிறேன்‘ என சுப்ரியாவிடம் கேட்டுள்ளார்.
ஆனால் அவரோ, உன் நடவடிக்கை பிடிக்கவில்லை என்று கூறி திருமணத்துக்கு மறுத்துள்ளார். இதனால், ஆத்திரம் அடைந்த தங்கதுரை தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து சுப்ரியாவின் தலை, மார்பு, வயிறு உள்ளிட்ட இடங்களில் சரமாரியாக குத்தி உள்ளார். இதில், அலறியடித்தபடி அவர் சரிந்தார். சத்தம் கேட்டு மற்றொரு அறையில் இருந்த உறவினர்கள் ஓடிவந்தனர். அதற்குள் தங்கதுரை தப்பிவிட்டார். உயிருக்கு போராடிய சுப்ரியாவை பொள்ளாச்சி அரசு மருத்துவ மனைக்கு கொண்டு சென்றனர். ஆனால், வழியிலேயே அவர் பரிதாபமாக இறந்தார். இதையடுத்து, கிழக்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து, தங்கதுரையை தேடி வருகின்றனர்.

No comments:
Post a Comment