அமெரிக்காவில் பிறந்து பின்னர் பிரித்தானியாவில் வசித்து வந்த இப்ரஹிம் என்னும் நபர், 250.000 ஆயிரம் பவுன்ஸ் பெறுமதியான நகைகளை கொள்ளையடித்துள்ளார். ஏனஸ்ட் ஜோன்ஸ் என்னும் நகைக் கடைக்குள் நுளைந்த இந்த நபர் 2 மோதிரங்களை மட்டுமே படு சாதூரியமாக கொள்ளையிட்டுச் சென்றுள்ளார். இவை இரண்டும் வைரத்தால் ஆன, பிளாட்டினம் மோதிரங்கள் ஆகும். கால் மில்லியன் பவுன்டுகள் பெறுமதியானவை. ஆனால் தற்செயலாக நகைக் கடைக்குள் தனது மோபைல் போனை இவர் விட்டுச் சென்றுவிட்டார். அதில் தன்னை தானோ போட்டோவும் (செல்ஃபி) எடுத்துள்ளார். அதனைப் கண்டுபிடித்த பொலிசார் உடனடியாக இப்ரஹிமை தேட ஆரம்பித்தார்கள்.
சில தினங்களிலேயே பொலிசார் அவரைக் கைதுசெய்துவிட்டார்கள். இதேவேளை அவரது கைரேகையை ஸ்கேன் செய்து பார்த்த பொலிசார் ஆடிப்போய்விட்டார்கள். சுமார் 45 திருட்டுச் சம்வங்களில் இவர் தேடப்பட்டு வந்துள்ளார். யார் ஆள் என்பது பொலிசாருக்கு தெரியாது. ஆனால் களவுபோன இடங்களில் இருந்து பெறப்பட்ட கைரேகைகளை அவர்கள் கம்பியூட்டரில் பதிவுசெய்து வந்துள்ளார்கள். மேலும் இப்ரஹிம் கைதானபோது அவரின் கைரேகையை எடுத்து டேட்டா பேசில் தேடிப் பார்த்தால் பல களவில் இவர் சம்பந்தப்பட்டு இருப்பது வேட்டவெளிச்சமானது.
கடந்த வெள்ளி இடம்பெற்ற வழக்கில் நீதிபதிகள் இவருக்கு 5 ஆண்டுகள் சிறைத்தண்டனை வழங்கி தீர்ப்பளித்துள்ளார்கள். மோபைலில் செஃல்பி எடுத்து வாழ்ந்தவர்களும் இருக்கிறார்கள். இவ்வாறு மாட்டிக்கொண்டவர்களும் இருக்கிறார்கள்.
No comments:
Post a Comment