க்ரீன் பேங்க் கிராமத்தில் உள்ள மக்கள் தொகை 143 ஆகும், இங்கு செல்போன் போன்றவவை தடை செய்யப்பட்டுள்ளதால் நிம்மதியாக இருக்க விரும்புபவர்கள் இங்கு வந்து தஞ்சமடைகின்றனர். க்ரீன் பேங்க் கிராமத்தில் வந்து தஞ்சமடைந்தவர்களில் ஒருவரான 53 வயதுடைய சார்லஸ் மெக்னா கூறியதாவது, ‘ஜூலை மாதத்தில் நெப்ராஸ்கரின் நகரில் இருந்து வெளியேறி இங்கு வந்து சேர்ந்தேன், ஏனெனில் நான் செல்போனால் உருவாகும் மின்காந்த அலைகளால் கடுமையாக பாதிக்கப்பட்டிருந்தேன், ஆதலால் செல்போன் உபயோகிக்காத இந்த கிராமத்திற்கு வந்தேன்’ என்று கூறியுள்ளார்.
க்ரீன் பேங்க் மற்றும் Pocahontas நாட்டினை சுற்றி உள்ள பகுதிகளை 1958ம் ஆண்டில் ‘அமைதியான மண்டலம்’ என்று அறிவித்துள்ளனர். 100 மீட்டர் (330 அடி) விட்டம் கொண்ட ஒரு வெள்ளை டிஷ், 150 மீட்டர் (500 அடி) உயரத்தில் நிற்கிறது. இந்த தொலைநோக்கி விண்வெளியில் இருந்து இரவும், பகலும் சிக்னல்களை படம்பிடிப்பதற்காக செயல்படுகிறது. இந்த ‘தேசிய வானொலி அமைதியான மண்டலம்’ 33,000 சதுர கிலோமீட்டர் (13,000 சதுர மைல்) பரப்பளவு முழுவதும் தொலைநோக்கி கண்காணிக்கிறது.
No comments:
Post a Comment