Tuesday, November 18, 2014

இன்று முத்தப்போராட்டம் நாளை மூத்திரப்போராட்டம்-முத்த மழைக்கு பதிலடியாக துப்பு மழை!

முத்த மழைக்கு பதிலடியாக துப்பு மழை
[ திங்கட்கிழமை, 17 நவம்பர் 2014, 12:04.24 PM GMT +05:30 ]
சென்னை ஐஐடி மாணவர்கள் நடத்திய முத்தப் போராட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து இந்து முன்னணி அமைப்பினர் திங்கள்கிழமை ஐஐடி நுழைவு வாயில் முன்பு எச்சில் துப்பி போராட்டம் நடத்தியுள்ளனர்.
கேரள மாநிலம் கொச்சியில் நவம்பர் 2ஆம் திகதி கிஸ் ஆப் லப் என்ற அமைப்பைச் சேர்ந்த இளைஞர்களும், இளம் பெண்களும் ஒருவருக்கொருவர் கட்டித்தழுவி முத்தங்களை பரிமாறிக்கொண்டனர்.
இதனை கண்டித்து கேரள மாநில பாஜக மற்றும் சில அமைப்புகள் அவர்களை விரட்டி அடித்தனர். கேரள மாநிலத்தில் முத்தப் போராட்டத்தில் ஈடுபட்டவர்களுக்கு ஆதரவு தெரிவித்து, சென்னை ஐஐடி மாணவர்கள் ஒருவருக்கொருவர் கட்டிப்பிடித்து முத்தங்களை பரிமாறிக்கொண்டனர்.
இதனை கண்டித்து இந்து முன்னணி அமைப்பின் சார்பில், சென்னை ஐஐடி நுழைவு வாயிலில் நூதன முறையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
போராட்டத்தில் ஈடுபட்ட அனைவரும் ஐஐடி நுழைவு வாயில் முன்பு எச்சிலை துப்பினர்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர்கள், இந்த முத்தங்களை பரிமாறிக்கொள்வது தமிழக பண்பாட்டுக்கும், கலாச்சாரத்திற்கும் எதிரானது.
இதுபோன்று பொது இடங்களில் மாணவ மாணவிகள் முத்தங்களை பரிமாறிக்கொள்வது, ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது என்றும் வன்மையாக கண்டிக்கத்தக்கது எனவும் தெரிவித்துள்ளனர்.
காவல்துறையிடம் அனுமதி பெறாமல் இந்த போராட்டம் நடத்தியதால் இவர்களை பொலிசார் கைது செய்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர்கள், மாணவ மாணவிகள் முத்தங்களை பரிமாறிக்கொள்வதற்கு ஐஐடி நிர்வாகம் எப்படி அனுமதி கொடுத்தது. சென்னை காவல்துறையினர் எப்படி அனுமதி வழங்கினர்.
இதுபோன்று தமிழகத்தில் எங்கும் இனி நடைபெறக் கூடாது என்றும், அதற்கான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழக அரசை கேட்டுக்கொள்கிறோம் எனக் கூறியுள்ளனர்.

இன்று முத்தப்போராட்டம் நாளை மூத்திரப்போராட்டம்
[ செவ்வாய்க்கிழமை, 18 நவம்பர் 2014, 07:51.57 AM GMT +05:30 ]
முத்தப்போராட்டம் நடத்துபவர்களை கோபமாக கண்டித்துள்ளார் இந்து முன்னணி நிறுவனர் ராமகோபாலன்.
கிஸ் ஆப் லவ் (முத்தப் போராட்டம் ), ஹக் ஆப் லவ் ( கட்டி அணைக்கும் போராட்டம் ) என ஆங்காங்கே நடத்தப்படும் போராட்டங்கள் சர்ச்சையை உண்டாக்கி வருகிறது.
இதற்கு பல தரப்பிலிருந்து எதிர்ப்பும், கண்டனங்களும் குவிந்து வருகின்றன. இந்நிலையில், நேற்று கோவை, ஆர்.எஸ்.புரத்தில் இந்து முன்னணியின் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
இதில், இந்து முன்னணி நிறுவனர் ராமகோபாலன் கலந்து கொண்டார். கூட்டத்தின் முடிவில் செய்தியாளர்களைச் சந்தித்த ராமகோபாலன் கூறியதாவது, முத்தப்போராட்டம் என்பது கலாச்சார சீரழிவு.
இப்போது முத்தப்போராட்டம் நடத்தும் இவர்கள், அடுத்து மூத்திரப்போராட்டம் நடத்துவார்களா? ஏதோ சில அராத்துக்கள், கிறுக்குத்தனமாக இருப்பவர்கள் விளம்பரம் தேடிக் கொள்வதற்காக செய்கிறார்கள் என்று கூறியுள்ளார்.

No comments:

Post a Comment