Sunday, November 9, 2014

லண்டன் வீடுகளில் படு ஆபத்தான் சிலந்தி: பாஃஸ் விடோ என்னும் சிலந்தியை கண்டால் ஜாக்கிரதை !

லண்டனில் உள்ள பல வீடுகளில் சாதரண சிலந்திகள் காணப்படுவது வழக்கம். இவை பெரும் பாலும் கடிப்பது இல்லை. அப்படி கடித்தாலும் அதில் பெரும் விஷம் இல்லை. ஆனால் கடந்த 2 வருடங்களில் குறிப்பாக லண்டனில் பாஃஸ் விடோ( FALSE WIDOW) என்னும் ஒருவகை சிலந்திகள் பெருகியுள்ளது. அவை மரங்களில் வசித்தாலும் கால நிலை மாற்றத்தால் அவை தற்பொழுது வீடுகளில் வசிக்கவும் ஆரம்பித்து விட்டது. இவை மனிதர்களை கண்டால் பயந்து ஓடாது. மேலும் கிட்ட நெருங்கிச் சென்றால் உடனே தாக்குகிறது. இது கடித்து பிரித்தானியாவில் கடந்த 2 வருடங்களில் சிலர் இறந்துள்ளார்கள். மேலும் பலரது அங்கங்கள் அகற்றப்பட்டுள்ளது.

நேற்று முந்தினம் சரே நகரில் 60 வயது மூதாட்டியும் இந்தச் சிலந்தி கடித்ததால் இறந்துள்ளார். சாதாரண சிலந்தியில் இருந்து இந்த பாஃஸ் விடோ சிலந்து சற்று வேறுபட்டு காணப்படுகிறது. இதன் மேல்புறத்தில் வெள்ளை நிறத்தினால் ஆன கோடுகள் கொண்ட உருவம் ஒன்று உள்ளது. இதுபோன்ற சிலந்தியை கண்டால் மிகவும் ஜாக்கிரதையாக இருப்பது நல்லது. அதிலும் அதனை வீட்டில் கண்டால், உடனே உங்கள் வீட்டை சுத்தம் செய்து வேறு(அதன் குட்டிகள்) இருக்கிறதா என்று பார்பது நல்லது. சிலந்தி மற்றும் பூச்சிகளை கொல்லும் மருந்தை வாங்கி தெளிப்பது நல்லது. அதிலும் சிறுவர்களுக்கும் உங்கள் பிள்ளைகளுக்கும் இது தொடர்பாக விழிப்புணர்வை ஊட்டுவது மிகவும் நல்லது.


No comments:

Post a Comment