ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் உரிய வேட்பாளரை தெரிவு செய்ய எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்கவுக்கு 48 மணிநேர கால அவகாசத்தை வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.
கோட்டே ஸ்ரீ நாக விகாரையில் நேற்றிரவு நடைபெற்ற எதிர்க்கட்சி பிரதிநிதிகளின் சந்திப்பின் போது இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
இதனடிப்படையில் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் பொது வேட்பாளர் சம்பந்தான பொது உடன்படிக்கை கையெழுத்திடப்படுவது இரண்டு நாட்களுக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது என நியாயமான சமூகத்திற்கா மக்கள் அமைப்பின் பேச்சாளர் கலாநிதி நிர்மல் ரஞ்சித் தேவசிறி தெரிவித்துள்ளார்.
எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளர் தெரிவு செய்யப்படுவதில் ஏற்பட்டு வரும் தாமதத்தை கவனத்தில் கொண்டு நேற்றைய கூட்டத்தில் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது எனவும் அவர் கூறியுள்ளார்.
அதேவேளை எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்க இரண்டு நாள் பயணமாக நாளைய தினம் வெளிநாடு புறப்பட்டுச் செல்ல உள்ளதாக தெரியவருகிறது.
ரணில் மற்றும் திஸ்ஸவுக்கு எதிராக நீதிமன்ற தடையுத்தரவு
ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க மற்றும் பொதுச் செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்க ஆகியோருக்கு எதிராக கொழும்பு மாவட்ட நீதிமன்றம் தடையுத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளது.
கம்பளை நகர சபை தலைவர் ஹெட்டியாராச்சியை கட்சியின் அங்கத்துவத்தில் இருந்து நீக்குவதை தடுக்கும் வகையில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ஜனாதிபதி மகிந்தா ராஜபக்ஷவை ஆதரிக்க ஹெட்டியாராச்சி தீர்மானித்துள்ளார்.
இந்த தீர்மானம் காரணமாக தன்னை ஐக்கிய தேசியக் கட்சியில் இருந்து விலக்க தயாராகி வருவதாகவும் அதனை தடுத்து நிறுத்தும் உத்தவொன்றை பிறப்பிக்குமாறு கோரி அவர் தாக்கல் செய்த மனுவை விசாரணைக்கு எடுத்து கொண்ட போதே நீதிமன்றம் இந்த தடையுத்தரவை பிறப்பித்துள்ளது.
http://www.tamilwin.com/show-RUmszBSbKYjqz.html
No comments:
Post a Comment