Monday, November 10, 2014

யாழ் காதலிக்கு பரிசு வாங்கிய 14 வயது கில்லாடி சிறுவன்….

தனது தந்தையின் பண அட்டையை திருடி 15 ஆயிரம் ரூபாவுக்கு தனது காதலிக்கு பரிசுப் பொருள் வாங்கிக் கொடுத்துள்ளான் 14 வயது யாழ்ப்பாணச் சிறுவன். யாழ் இணுவில் பகுதியைச் சோ்ந்த ஆசிரியா் ஒருவரின் மகனே இவ்வாறு காதலுக்காக அப்பாவின் காசைக் கொடுத்தவராவார்.

கடந்த வெள்ளிக்கிழமை குறித்த ஆசிரியா் தனியார் வகுப்பு ஒன்றில் கல்வி கற்பித்துக் கொண்டிருந்த போது தனது கைத்தொலைபேசிக்கு குறுந்தகவல் ஒன்று வந்தபோது அதைப் பார்த்த ஆசிரியா் அதிர்ச்சியுற்றுள்ளார்.
அவா் கணக்கு வைத்திருந்த வங்கியில் இருந்து 15 ஆயிரம் ரூபா பெறப்பட்டுள்ளது என தகவல் வந்திருந்தது. உடனடியாக தனது போ்ஸ்சைப் பார்த்த போது அதற்குள் இருந்த பண அட்டை காணாமல் போயிருந்ததை கண்டு அதிர்ச்சியுற்றுள்ளார்.
தனது மனைவியைத் தொடா்பு கொண்டு கேட்ட போது பண அட்டை வீட்டில் இல்லை என்பதை அறிந்த ஆசிரியா் உடனடியாக வீட்டுக்குச் சென்று அங்கிருந்து வங்கிக் சேவைக்கு தகவல் கொடுத்து பண அட்டை இணைப்பை அகற்றியுள்ளார்.
அதன் பின்னா் குறித்த பண அட்டையை எடுத்தவா் யார் என்பது பற்றி ஆராய தொடங்கியிருந்தார்.
இதன் பின்னா் அடுத்த நாள் வங்கியில் தொடா்பு கொண்ட போது பொலிசாரிடம் அறிவிக்குமாறும் தாங்களும் அதனைக் கண்டு பிடிப்போம் எனவும் வங்கி நிர்வாகம் கூறிய பின் ஆசிரியா் பொலிசாரிடம் செல்ல முற்பட்ட போது ஆசிரியரின் மூத்த மகனான 14 வயது சிறுவன் வங்கி அட்டை தமது வீட்டின் கேட் அருகே இருந்ததாகத் தெரிவித்து கொடுத்துள்ளான்.
இதன் பின்னா் ஆசிரியா் மகனை சந்தேகத்தில் விசாரித்து பொலிஸ் பிடிக்கும் என அச்சுறுத்திய போது அப் பணத்தை தான் தான் எடுத்தது என ஒத்துக் கொண்டுள்ளான். குறித்த பண அட்டையின் இரகசிய இலக்கமும் தந்தையின் போ்ஸ்சில் இருந்ததை எழுதிவைத்து தான் எடுத்ததாக கூறியுள்ளான்.
இதன் பின்னா் பணம் எங்கே என ஆசிரியா் உட்பட உறவினா்கள் கேட்டும் கூட மகன் வாயைத் திறக்கவே இல்லை எனத் தெரியவருகின்றது. உடனடியாக ஆசிரியா் மகனைப் பொலிஸ் நிலையத்தில் ஒப்படைப்பதாக அச்சுறுத்தி அங்கு கொண்டு செல்வது போல் கொண்டு சென்ற போது வழியில் மகன் பணம் எவ்வாறு செலவு செய்யப்பட்டுள்ளது என கூறியுள்ளான்.
தனியார் கல்வி நிலையத்திற்கு சைக்கிளில் செல்லும் மகன் அங்கு தனது வகுப்பில் படிக்கும் மாணவி ஒருவரை காதலித்ததாகவும் அவளின் பிறந்தநாள் என்ற படியால் அவளுக்கு பரிசு கொடுக்க முயன்றதாகவும் அதற்காக புதிய தொலைபேசி ஒன்றைப் பரிசளிக்க விரும்பிய மாணவன் அதற்கான பணத் தேவைக்காக தந்தையின் பணத்தை எடுத்ததாகவும் தெரியவருகின்றது, பணத்தை வங்கியில் இருந்து எடுத்து புதிய தொலைபேசி வாங்கி வைத்திருந்த மாணவன் அதை காதலிக்கும் கொடுத்துள்ளார்.
ஆசிரியா் தனது மகனை அழைத்துச் சென்ற காதலியின் வீட்டுக்குச் சென்று நடந்ததைக் கூறி அந்த தொலைபேசியையும் மீளப் பெற்றுள்ளார். குறித்த காதலியின் பெற்றோர் ஆசிரியரின் உறவினா் எனத் தெரியவருகின்றது.

No comments:

Post a Comment