கனடா- செவ்வாய்கிழமை காலை பிரார்த்தனையின் போது ஜெருசலத்தில் உள்ள ஒரு ஜெப ஆலயத்திற்குள் கசாப்புக்கடைக்கார் பயன்படுத்தும் கத்தி, துப்பாக்கி போன்றவற்றுடன் நுழைந்த இரு பலஸ்தீன ஒன்றுவிட்ட சகோதரர்கள் பயங்கரமான கொடிய தாக்குதலை நடாத்தியுள்ளனர்.
இந்த கொடிய இரத்தவெறியான தாக்குதலில் நால்வர் கொல்லப்பட்டதுடன் பலர் காயமடைந்துள்ளனர். கொல்லப்பட்டவர்களில் மூவர் அமெரிக்கர்கள் என்றும் ஒருவர் பிரித்தானியர் என்றும் தெரியவந்துள்ளது. தாக்குதலில் ஈடுபட்டவர்கள் பொலிசாரால் சுட்டுக்கொல்லப்பட்டனர்.
முன்னாள் ரொறொன்ரோ வைத்தியர் ஜொய்ஸ் மோறல் அவ்விடத்திற்கு விரைந்து காய மடைந்தவர்களிற்கு சிகிச்சை அளித்துள்ளார் எனவும் கூறப்பட்டுள்ளது.
கொல்லப்பட்ட நான்கு வெளிநாட்டவர்களும் இரட்டை இஸ்ரேல் குடியுரிமை வைத்திருந்தவர்கள். தாக்குதல் இடம்பெற்றது ஒரு அதிதீவிர மரபார்ந்த பகுதியாகும் என்றும் அங்கு ஆங்கிலம் பேசும் குடிவரவாளர்கள் பெரும்பான்மையாக வசிக்கும் சுற்றுப்புறமுமாகும்.
இச்சம்பத்தை இஸ்ரேலிய பிரதமர் பென்ஜமின் நத்தன்யாஹூ வன்மையாக கண்டித்துள்ளார்.
கோல்லப்பட்ட அமெரிக்கர்கள் Aryeh Kupinsky, Cary William Levine and Mosheh Twersky என ஜெருசலத்தில் உள்ள யுஎஸ். தூதரகம் அடையாளம் கண்டுள்ளது.
பிரிட்டனை சேர்ந்தவர் அவ்ரஹாம் கோல்பேர்க் என இஸ்ரேலிய அதிகாரிகள் அடையாளம் கண்டுள்ளனர்.
கனடியர் ஒருவரும் காயமடைந்துள்ளதாக கூறிய கனடிய வெளியுறவு திணைக்கள பேச்சாளர் மேலதிக விபரங்களை வழங்க மறுத்துள்ளதாக தெரியவந்துள்ளது.
இச்செயல் ஒரு தூய பயங்கரவாதம் மற்றும் மிருகத்தனமான வன்முறையின் நடவடிக்கை என யு.எஸ். மாநில செயலாளர் ஜோன் கெரி தெரிவித்துள்ளார்.
இத்தாக்குதலில் ஆறுபேர்கள் காயமடைந்துள்ளதாகவும் இருவர் பொலிஸ் அதிகாரிகள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
shoot8

shoot1shootshoot3shoot6shoot7shoot11shoot9shoot12