Tuesday, November 18, 2014

இராணுவ வீரர்களின் தலைத் துண்டிப்பை அரங்கேற்றிய ஐ.எஸ்.ஐ.எஸ் (வீடியோ இணைப்பு) !

சிரியாவை சேர்ந்த 18 இராணுவ வீரர்களின் தலையைத் துண்டித்து கொன்ற காணொளியை ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாதிகள் வெளியிட்டுள்ளனர்.
ஈராக் மற்றும் சிரியாவின் பல்வேறு பகுதிகளை கைப்பற்றி தனி இஸ்லாமிய தேசத்தை உருவாக்கிய ஐ.எஸ்.ஐ.எஸ், தொடர்ந்து பல அட்டூழியங்களை அரங்கேற்றி வருகிறது.
இந்நிலையில் அமெரிக்க பிணைக்கைதி பீட்டர் எட்வர்டு காஸ்சிக் என்பவரை தலைத் துண்டித்து கொன்ற அதே காணொளியில், சிரியாவை சேர்ந்த 18 இராணுவ வீரர்களின் தலைகளை துண்டித்து படுகொலை செய்துள்ளனர்.
இந்த காணொளியில் இராணுவ வீரர்கள் மண்டியிட்டு இருப்பது போலவும், அவர்களின் தலைகளை கத்தியால் தீவிரவாதிகள் கொய்வது போலவுமான கொடூர காட்சிகள் இடம் பெற்றுள்ளன.
http://newsonews.com/view.php?23BB2cgMA42C8302lA3dSOT22M02e2A62bVnB3

No comments:

Post a Comment