சேலம் நாடாளுமன்ற தொகுதி திமுக வேட்பாளர் உமாராணி செல்வராஜூக்கு ஆதரவாக நடிகை குஷ்பு பிரசாரம் செய்தார்.
அப்போது அவர் கூறுகையில், நான் திமுக உறுப்பினராக வந்து உங்களை சந்திக்கிறேன், தமிழக மக்களை பார்க்கும் போது மிகவும் சந்தோஷப்படுகிறேன்.
நான் உங்கள் வீட்டு மகளாக, உங்கள் வீட்டு மருமகளாக வந்து வாக்கு கேட்கிறேன். எனக்காக வாக்கு கேட்கவில்லை, தமிழக நலனுக்காக, தமிழக மக்களின் நலனுக்காக கேட்கிறேன்.
உமாராணிக்கு நீங்கள் உதய சூரியன் சின்னத்தில் வாக்களித்தால் அவர் சேலம் மாவட்டத்திற்கு தேவையான அனைத்து அடிப்படை வசதிகளையும் செய்து தருவார், கூப்பிட்ட குரலுக்கு ஓடோடி வந்து உதவி செய்வார்.
ஜெயலலிதாவிற்கு வாக்களித்தீர்கள், ஆனால் அவர் இந்த மூன்று வருடத்தில் என்ன செய்தார், ஒன்றும் செய்யவில்லை, நமக்கு ஏமாற்றம் மட்டுமே கிடைத்துள்ளது.
பிரச்சினைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க வாக்காளர்களுக்கு ஒரு வாய்ப்பு கிடைத்துள்ளது. இதற்கு வாக்காளர்களாகிய நீங்கள் உதய சூரியன் சின்னத்தில் வாக்களித்து உமாராணியை அதிக வாக்குவித்தியாசத்தில் வெற்றி பெற செய்யுங்கள் என்று பேசினார்.
இந்த சுற்றுப்பயணத்தில் மாவட்ட பொறுப்பாளரும், முன்னாள் எம்.எல்.ஏவுமான எஸ்.ஆர்.சிவலிங்கம், முன்னாள் மேயர் ரேகாபிரியதர்சினி, சேலம் மாவட்ட முன்னாள் ஊராட்சி குழு துணை தலைவர் பாரப்பட்டி சுரேஷ்குமார், வெண்ணிலா சேகர், பூலாவரி சேகர் உட்பட பலரும் கலந்து கொண்டனர்.
http://www.newindianews.com/view.php?224MC302lOU4e2DmKcb240Mdd304obc3mDVe43OlR0236Ay3
|
No comments:
Post a Comment