Sunday, April 13, 2014

உங்கள் பெற்றோர்களை பழிவாங்க, சித்திரவதை செய்ய


உங்கள் பெற்றோர்களை பழிவாங்க, சித்திரவதை செய்ய விரும்பினால் சுலபமான வழி இருக்கிறது!நீங்கள் ஐரோப்பாவில் வாழ்ந்தால்,நீங்கள் அதை செய்ய முடியும்!!

உங்கள் பெற்றோரை ஐரோப்பாவுக்கு அழைத்து அகதி அந்தஸ்து கோர வைத்து அகதி முகாங்களில் தனிமையில் விட்டு மொழி தெரியாமல் முழிக்கவைத்து அருகில் இருந்ததும் சென்று பார்க்காமல் விட்டாலே போதுமானது. வேண்டுமென்றால் அவர்களிடம் உள்ள காசையும் பிடிங்கிக்கொள்ளலாம்.

அவர்களின் கட்டாய தேவைகளை செய்யாமல் விட்டாலே சிறப்பு.

அறியாதவர் முன் பெற்றோர்களை கண்கலங்க விடுவதே பிள்ளைகளின் கடமை.

பெற்றோரை சென்று பார்ப்பதைவிட களியாட்டங்களில் கலந்ததுகொள்வதே மிகவும் சிறந்தது.

உண்மையில் பெற்றோரில் பாசமுள்ளவர்களே உங்களால் முடியாவிட்டால் உங்களை பெற்றவர்களை அழைத்து அவமானப்படுத்த வேண்டாம்.,துன்பப்படுத்தவேண்டாம்!!பிச்சையெடுக்க வைக்கவேண்டாம்,தனிமையில் வாட வைக்கவேண்டாம்!!!

No comments:

Post a Comment